உடன் நடித்த நடிகையின் பெயரையே மறந்த பவன் கல்யாண்...தீயாய் பரவும் வீடியோ
சென்னை : அன்டே சந்தரானிக்கி பட விழாவில் பவன் கல்யாணி செய்த காரியம் தான் டோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. சோஷியல் மீடியாக்களிலும் ரசிகர்கள் இதை பற்றியே பேசி வருகின்றனர்.
Recommended Video
தெலுங்கில் ரொமான்டிக், காமெடி படமாக உருவாக்கப்பட்டுள்ள படம் அன்டே சந்தரானிக்கி. நாணி, நஸ்ரியா லீட் ரோலில் நடித்துள்ள படம். இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் என்ட்ரி கொடுத்துள்ளார் நஸ்ரியா. இந்த படத்தை விவேக் அத்ரியா எழுதி, இயக்கி உள்ளார்.
'அன்டே சந்தரானிக்கி' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ஜுன் 10 ம் தேதி ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரிலீசான 3 நாட்களில் 26.25 கோடிகளை வசூல் செய்துள்ளது.

இதுதான் படத்தின் கதை
பிராமண குடும்பத்தை சேர்ந்த பையன், கிறிஸ்தவ பெண்ணை காதலிக்கிறார். தனது பெற்றோரை சமாதானம் செய்து, அவர்களின் சம்மதத்தை பெறுவதற்காக பிராமணப் பெண் போல பயிற்சி கொடுத்து, தனது காதலியை வீட்டிற்கு அழைத்து வருகிறார். பெற்றோர்கள் சம்மதத்தை பெற காதலர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள், பெற்றோர் சம்மதித்தார்களா, இவர்களின் காதல் திருமணத்தில் முடிந்ததா என்பது படத்தின் கதை.

இவர் பெயரை மறந்துட்டாரே
இந்த படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் வந்திருந்தார். மேடையில் பேசிய பவன் கல்யாண், அன்டே சந்தரானிக்கி படத்தில் நடித்த நானி,நஸ்ரியா மற்றும் படம், படக்குழுவினர் பற்றி பேசி பாராட்டினார். ஆனால் நிவேதா தாமஸ் பெயரை குறிப்பிட மறந்தார்.

நிவேதாவிற்கு ஷாக் கொடுத்த பவன்
பிறகு பவன் கல்யாணுக்கு மேடையில் கை கொடுக்க சென்றார் நிவேதா. அப்போது தான் பவன் கல்யாணுக்கு நிவேதா ஞாபகம் வந்தது. பின்னர் அருகில் இருந்தவரை அழைத்து அவரது பெயரை கேட்டு, பின்னர் உடனடியாக மைக்கை வாங்கி, மன்னிப்பு கேட்டு நிவேதா பெயரை கூறி, அவர் நன்றாக நடித்திருந்தார் என கூறி வாழ்த்தினார். இதை எதிர்பார்க்காத நிவேதா தாமஸ் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.
செம டிரெண்டாகும் வீடியோ
தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தெலுங்கு ரீ - மேக்கான 'வக்கீல் சாப்' படத்தில் பவன் கல்யாண் நடித்திருந்தார். இந்த படத்தில் முக்கிய ரோலில் நிவேதா தாமஸ் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஹிட்டான படத்தில் சமீபத்தில் நடித்த நடிகையின் பெயரையே மறந்து விட்டு, மேடையில் பக்கத்தில் இருந்தவரிடம் கேட்டு, பிறகு பாராட்டிய பவன் கல்யாணின் செயலை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











