»   »  தெலுங்கின் 'தல தளபதி'யாக மாறப்போகும் சிரஞ்சீவி - பவன் கல்யாண்

தெலுங்கின் 'தல தளபதி'யாக மாறப்போகும் சிரஞ்சீவி - பவன் கல்யாண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதாராபாத்: அஜீத் நடிப்பில் வெளியான 'வீரம்','வேதாளம்' படங்களின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாண் நடிப்பது உறுதியாகியுள்ளது.

சிறுத்தை சிவா-அஜீத் கூட்டணியில் வெளியான 'வீரம்' ,'வேதாளம்' படங்கள் ஹிட்டடித்ததில் தற்போது 3 வது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது.

இந்நிலையில் இப்படங்களின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண் நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

குஷி 2

குஷி 2

கடந்த மாதம் எஸ்.ஜே.சூர்யா - பவன் கல்யாண் இணையும் புதிய படத்திற்கான பூஜை போடப்பட்டது. 'குஷி' படத்தின் தொடர்ச்சியாக 'குஷி 2'வை எஸ்.ஜே.சூர்யா எடுக்கப்போகிறார் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது தமிழில் வெளியான 'வீரம்' படத்தின் ரீமேக் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

வேதாளம்

வேதாளம்

இதுதவிர 'வேதாளம்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் பவன் கல்யாண் நடிக்கவிருக்கிறார். இப்படத்தை இயக்குவதற்கு 'ஜில்லா' இயக்குநர் ஆர்.டி.நேசனிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தமிழில் தயாரித்த ஏ.எம்.ரத்னமே தெலுங்கிலும் தயாரிக்கிறார்.

சிரஞ்சீவி

சிரஞ்சீவி

பவன் கல்யாணின் அண்ணன் சிரஞ்சீவி, விஜய் நடிப்பில் வெளியான 'கத்தி' படத்தை தனது 150 வது படமாக தேர்ந்தெடுத்துள்ளார். இப்படத்தை அவரது மகன் ராம்சரண் சொந்தமாக தயாரிக்கிறார். 9 வருடங்களுக்குப்பின் இப்படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ராம்சரண்

ராம்சரண்

அப்பா, சித்தப்பா வழியில் மகன் ராம்சரண் 'தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்து வருகிறார். தமிழில் ஜெயம் ரவியை மிரட்டிய அரவிந்த் சாமிதான் தெலுங்கிலும் வில்லன். லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

மொத்தத்தில் சிரஞ்சீவி குடும்பம் தற்போது 'ரீமேக்' குடும்பமாக மாறியுள்ளது..

English summary
Sources said Pawan Kalyan Remake Ajith's Veeram, Vedalam Movies in Telugu.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil