»   »  ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகருக்கு பளார் விட்ட 'ரியல்' பவர்ஸ்டார்

ஷூட்டிங் ஸ்பாட்டில் காமெடி நடிகருக்கு பளார் விட்ட 'ரியல்' பவர்ஸ்டார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் சர்தார் கப்பார் சிங் படப்பிடிப்பின்போது நகைச்சுவை நடிகர் ஷங்கரை கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாராம்.

தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தயாரித்து நடித்துள்ள படம் சர்தார் கப்பார் சிங். கே. எஸ். ரவீந்திரா இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பவன் கல்யாண் டென்ஷனாகி நகைச்சுவை நடிகர் ஷங்கரை அறைந்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகின.

Pawan Kalyan slaps comedian Shankar: Know why?

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் கொண்டாடும் வகையில் நடந்து கொள்ளும் பவன் ஒரு நடிகரை அறைந்துவிட்டார் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

ஷங்கர் படப்பிடிப்பு தளத்திற்கு லேட்டாக வந்ததும், அக்கறை இன்றி நடந்து கொண்டதும் தான் பவன் அவரை அறைய காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,

ஷங்கர் படப்பிடிப்பு தளத்தில் ஓவராக சீன் போட்டுக் கொண்டிருந்தார். மேலும் இயக்குனரை கிண்டல் செய்து படப்பிடிப்புக்கு இடையூறாக இருந்தார். இதனால் அவருக்கு பாடம் கற்பிக்க பவன் அவரை கன்னத்தில் அறைந்தார்.

பின்னர் தனது செயலுக்காக அவர் ஷங்கரிடம் மன்னிப்பு கேட்டார் என்றார்.

நான் பவன் கல்யாணின் தீவிர ரசிகனாக்கும். எதிர்காலத்தில் அவருக்கு கோவில் கட்டுவதே எனது லட்சியம் என்று ஷங்கர் பலமுறை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
From the past few days, digital platforms are ablaze with the reports that, Pawan Kalyan slapped the comedian Shakalaka Shankar of Jabardasth fame, on the sets of Sardaar Gabbar Singh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil