»   »  பவன்.... நம்பிக்கை தரும் இன்னொரு இளம் இசையமைப்பாளர்!

பவன்.... நம்பிக்கை தரும் இன்னொரு இளம் இசையமைப்பாளர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கதை சொல்லப் போறோம் படம் மூலம் அறிமுகமாகியுள்ளார் புதிய இசையமைப்பாளர் பவன்.

சென்னையை சேர்ந்தவரான பவன் லண்டனில் எஞ்சினியரிங் முடித்துவிட்டு இசை மீதான நாட்டத்தால் திரைத்துறையைத் தேர்ந்தெடுத்தாராம்.

Pawan, a new music director in Tamil Cinema

தமிழ் படங்களில் பணியாற்ற விரும்பி மீண்டும் சென்னை வந்து வாய்ப்புகள் தேடியவர், இயக்குனர் கல்யான் அறிமுகத்தில் கதை சொல்லப் போறோம் படத்தில் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இப்போது அடுத்தடுத்து நான்கைந்து படங்களுக்கு இசையமைத்து வருகிறார். நகர்வலம், சினாமிகா, ஆழி போன்றவற்றுக்கு இவர்தான் இசை.

குட்டி(2001) தமிழ்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குநர் ஜானகி விஸ்வநாதனின் படம் ஆழி. இப்படம் தமிழ் சினிமாவில் தனிப்பெயர் பெற்றுத்தரும் என நம்பிக்கை தெரிவித்த பவனுக்கு இன்ஸ்பிரேஷன் இளையராஜா.

"ராஜா சார் எனக்கு மட்டுமில்லை.. இசையை நேசிக்கும் எல்லாருக்கும் இன்ஸ்பிரேஷன் என்றால் அவர்தான்," என்கிறார்.

ரீமிக்ஸ் பாடல்களில் தனக்கு என்றுமே உடன்பாடில்லை எனும் பவன் முக்கியத்துவம் தர விரும்புவது மெலடிக்குதானாம்!

நல்லது!

English summary
Pawan is another new music director who made his launch in Kadha Solla Porom movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil