ப்ரோமோ எல்லாம் சும்மா தானா... பாவனி சீ னே இல்லாததால் பொங்கும் ரசிகர்கள்

சென்னை : விஜய் டிவி.,யில் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதில் போட்டியாளர்களாக 18 பேர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் சின்னத்திரை நடிகையான பாவனி ரெட்டியும் ஒருவர்.

இந்தி, தெலுங்கு சினிமாக்களில் சிறிய ரோல்களில் நடித்த பாவனி பிறகு தெலுங்கில் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதைத் தொடர்ந்து தமிழ் சீரியல்களிலும் நடிக்க பாவனிக்கு வாய்ப்பு கிடைத்தது. விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான சின்ன தம்பி, சன் டிவி.,யில் ஒளிபரப்பான ராசாத்தி உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார்.

வைரலான ஃபோட்டோஸ்

வைரலான ஃபோட்டோஸ்

பிறகு சீரியல்களில் நடிப்பதை நிறுத்திய பாவனி ரெட்டி, சோஷியல் மீடியாக்களில் படுகவர்ச்சியாக ஃபோட்டோக்கள், வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது கவர்ச்சி ஃபோட்டோக்களை பார்த்து விட்டு இவரின் தீவிர ரசிகர்கள் ஆனார்கள் பலர். சமீபத்தில் கூட தாவணியில் இவர் நடத்திய ஃபோட்டோஷுட் செம வைரலானது.

வயதை கேட்ட தாமரை

வயதை கேட்ட தாமரை

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். சாந்தமான முகத்துடன், இருக்கும் இடமே தெரியாமல் அமைதியாக இருந்து வருகிறார் பாவனி. இரண்டு நாட்களுக்கு முன் பாவனியை பார்த்து, உனக்கு 17 வயது இயக்குமா என கேட்கிறார் தாமரை செல்வி. அதற்கு ஷாக்காகும் பாவனி, தனக்கு 34 வயதாக போவதாக உண்மை வயதை சொன்னார்.

பரபரக்கும் ப்ரோமோ

பரபரக்கும் ப்ரோமோ

இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தினமும் நான்கு ப்ரோமோக்களை வெளியிட்டு வருகிறது விஜய் டிவி. நிகழ்ச்சி மீதான பரபரப்பை கூட்டுவதற்காக விறுவிறுப்பான காட்சிகள் அடங்கிய ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது.

கணவர் பற்றி பகிர்ந்த பாவனி

கணவர் பற்றி பகிர்ந்த பாவனி

இதில் ஒன்றாக நேற்று, தனது கணவர் பற்றி கேட்கும் இசைவாணியிடம் அவர் இறந்து விட்டதாக சொல்கிறார் பாவனி. மேலும் தனது கணவர் இறந்த போது தான் அழவில்லை எனவும், என்ன நடந்தது என புரியாமல் அதிர்ச்சியில் இருந்ததாகவும், பிறகு ஒவ்வொன்றாக நினைவுபடுத்தி புரிந்து கொண்டதாக பாவனி கூறுவதை போல் ஒரு ப்ரோமோ வெளியிடப்பட்டது.

எங்கப்பா அந்த சீன்

எங்கப்பா அந்த சீன்

ஆனால் நேற்று ஒளிபரப்பான எபிசோடிலோ, அன்சீன் காட்சிகளிலோ இந்த காட்சி இடம்பெறவே இல்லை. பாவனி, இசைவாணியிடம் பேசிக் கொண்டிருந்த சீன் மட்டும் வரவில்லையே. அப்படியானால் எதற்காக அந்த ப்ரோமோவை வெளியிட்டனர். அப்போ ப்ரோமோ எல்லாம் சும்மா தானா என பிக்பாஸை கேட்டு வருகிறார்கள் பாவனியின் ரசிகர்கள்.

இதுவாவது வருமா

இதுவாவது வருமா

பாவனியின் ரசிகர்கள் கேட்ட பிறகு தான், அட ஆமாம்ப்பா அந்த ப்ரோமோவின் வந்த காட்சி எங்கே போனது என நெட்டிசன்களும் கேட்க துவங்கி விட்டனர். இந்நிலையில் பாவனி தனது வாழ்க்கை பற்றி மதுமிதாவிடம் கண்ணீர் விட்டு பேசிக் கொண்டிருப்பது போன்ற ப்ரோமோ ஒன்றை இன்று விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இந்த சீனாவது வருமா அல்லது இதுவும் வெறும் ப்ரோமோவுக்காக மட்டுமா என பல கேட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X