இரவு முழுவதும் தூங்காமல்...பாவனி, மதுமிதாவிற்கு பிக்பாஸ் கொடுக்கும் தண்டனை

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கு கன்டென்ட் கொடுப்பதே அபிஷேக் தான். அவர் போய் விட்டால் ப்ரோமோவுக்கு கன்டென்ட் கொடுக்க ஆள் இல்லாமல் போய் விடுமே என பலர் கூறி வந்தனர்.

ஆனால் அதற்கு குறைவு இல்லாமல் அபிஷேக் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் ப்ரோமோக்களும், எபிசோட்களும் விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. இதனால் யார் செய்வது நியாயம், யார் பக்கம் நியாயம் இல்லை என ரசிகர்கள் சோஷியல் மீடியாக்கள் ப்ரோமோவை வைத்தே விவாதம் நடத்தி வருகிறார்கள்.

சண்டையுடன் நான்காவது வாரம்

சண்டையுடன் நான்காவது வாரம்

மூன்றாவது வாரத்தின் இறுதியில் அபிஷேக் வெளியேறியது, பிரியங்கா மற்றும் நிரூப் இடையேயான காரசார சண்டை என முடிந்தது. இதைத் தொடர்ந்து நான்காவது வார துவக்கத்தில் தாமரையின் காயினை உடைமாற்றும் அறைக்குள் சென்று சுருதி திருடியது, அதற்கு பாவனி உதவியது என செம ஹாட்டாக சென்றது.

சுவாரஸ்யம் இல்லாத இருவர்

சுவாரஸ்யம் இல்லாத இருவர்

தாமரைக்கு ஆதரவாக மற்ற ஹவுஸ்மெட்கள் சுருதியிடம் விவாதம் செய்தது, நான் உதவவில்லை என பாவனி பொய் பேசியது என சென்றது. அதைத் தொடர்ந்து போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டு, டாஸ்க் வழங்கப்பட்டது. நாள் முழுவதும் நடந்த இந்த டாஸ்க்கின் முடிவில், இரு அணியில் இருந்தும் சுவாரஸ்யம் இல்லாத நபர் ஒருவரை தேர்வு செய்யும்படி டீம் தலைவர்களான நிரூப் மற்றும் அக்ஷராவிடம் பிக்பாஸ் கூறினார்.

இப்படி ஒரு தண்டனை

இப்படி ஒரு தண்டனை

அதில் நிரூப், பாவனியின் பெயரையும், அக்ஷரா, மதுமிதாவின் பெயரையும் கூறினர். இதனால் பாவனி மற்றும் மதுமிதாவை கார்டன் ஏரியாவில் அமர்ந்து, இரவு முழுவதும் நெருப்பு மூட்டி, அதை அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற தண்டனையை பிக்பாஸ் கொடுக்கிறார். இதனால் ஹவுஸ்மெட்கள் மீது அதிருப்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள் மதுமிதா மற்றும் பாவனி. இப்படி இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

முதல் தண்டனை பெறும் நபர்கள்

முதல் தண்டனை பெறும் நபர்கள்

பிக்பாஸ் சீசன் 5 ல் முதல் ஆளாக சிறைக்கு சென்றவர் என்ற பெயரினை பெற்றார் நிரூப். அவரைத் தொடர்ந்து பிரியங்கா, சுருதி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் சுவாரஸ்யம் குறைவாக இருக்கும் நபர்கள் என பிக்பாசால் முதல் தண்டனையை பெற்றவர்களாக பாவனி மற்றும் மதுமிதா ஆகிய உள்ளனர்.

கமல் என்ன கேட்க போகிறார்

கமல் என்ன கேட்க போகிறார்

இமான் அண்ணாச்சி சொன்னது போல கன்டென்ட் என்பதே கிடையாது என்பது உண்மைதான் என்பது இந்த ப்ரோமோக்களை பார்க்கும் போது தெரிகிறது. ஏற்கனவே தாமரையின் காயினை திருடிய விவகாரத்தில் சுருதி மற்றும் பாவனி பற்றி பிக்பாஸ் மற்றும் வார இறுதியில் வரும் கமல் என்ன சொல்ல போகிறார்கள் என அனைவரும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்து என்ன நடக்கும்

அடுத்து என்ன நடக்கும்

இந்த சமயத்தில் சுவாரஸ்யம் இல்லை என சொல்லி பிக்பாசால் பாவனி மற்றும் மதுமிதா, வீட்டிற்கு வெளியில் இரவு முழுவதும் உட்கார வைக்கப்பட்டுள்ளது, அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை அனைவரின் மனதிலும் ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X