முதல் ஆளாக காப்பாற்றப்பட்ட பாவ்னி... மிரண்டு போன இசைவாணி, நிரூப்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் ஏழாவது வார இறுதியின் முதல் நாளான இன்று கமல் வந்து, போட்டியாளர்களிடம் பேசினார். அப்போது இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க், கண்ணாடி டாஸ்க், அதில் போட்டியாளர்கள் விளையாடி விதம் பற்றி பேசினார்.
அதே போல் பிரியங்கா டாஸ்க்கை விளையாடாமல், பாசத்தை காட்டியதாக கமல் கிண்டலாக கூறினார். அபிஷேக் என்ட்ரியான போது இமான் அண்ணாச்சி கொடுத்த ரியாக்ஷன், கேமை தாமரை ஆடிய விதம் பற்றியும் பேசினார்.

வெளியேற போகிறவர் யார்
இந்த வார்ம 9 பேர் நாமினேட் ஆகி உள்ள நிலையில் வெளியேற போகிறவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதோடு யாரெல்லாம் காப்பாற்றப்பட போகிறார்கள் என்பதை கமல் எப்போது சொல்வார் என காத்திருந்தனர்.

அபினய் காப்பாற்றப்பட்டாரா
அபினய்யிடம் ஏன் அழுதீர்கள் என கேட்ட கமல், ஒவ்வொரு வாரமும் நீங்கள் நாமினேட் செய்யப்பட்டாலும் இன்னமும் நீங்கள் வீட்டில் இருக்கிறீர்கள் என சொல்லி நம்பிக்கை கொடுத்தார். அப்போது இசைவாணி, நீங்க சேவ்ட் என கத்தினார். இதனால் அபினய் காப்பாற்றப்பட்டதாக கமல் சொல்ல போகிறார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அபினய் காப்பாற்றப்பட்டாரா, இல்லையா என்பது பற்றி ஏதும் சொல்லாமல் அடுத்தவரிடம் பேச போய் விட்டார்.

நம்பிக்கை வைத்த பாவ்னி
பிறகு சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்த கமல், காயின் வைத்திருப்பவர்கள் ஒன்றாக அமருங்கள் என சொல்லி, ஏன் இதுவரை காயினை பயன்படுத்த வில்லை என கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாவ்னி பேசிக் கொண்டிருக்கும் போது, நான் கடைசி 2 வாரங்களில் காயினை பயன்படுத்தலாம் என நினைக்கிறேன் என்றார் பாவ்னி.

பாவ்னியை சேக் செய்த கமல்
கடைசி 2 வாரங்கள் வரை இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறதா. நான் சொல்வதற்கு முன் நீங்களே கணித்து விட்டீர்கள். நீங்கள் சேவ்ட் என்றார் கமல். இதனை சற்றும் எதிர்பார்க்காத நிரூப்பும், இசைவாணியும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

அபிஷேக்கிற்கு காயின் கொடுத்த பாவ்னி
அதே சமயம் முதல் நாள் இரவு, தன்னிடம் வைத்திருந்த காயினை அபிஷேக் ராஜாவிடம் கொடுத்து, உன்னை காப்பாற்றிக் கொள்ள இதை வைத்துக் கொள்கிறார் என்றார் பாவ்னி. இது பற்றிய பிரியங்காவிடம் பேசிய அபிஷேக், நாளை அவள் போய் விடலாம் என நினைத்திருக்கலாம். அதனால் என்னிடம் காயினை கொடுத்து விட்டாள். நாளை அவள் போகவில்லை என்றால் இந்த காயினை அவளிடமே திருப்பி கொடுத்து விடுவேன் என்கிறார்.

முதல் சேவ்ட் ஏன்
தான் போய் விடுவோம் என நினைத்து அபிஷேக்கிடம் முன்கூட்டியே காயினை கொடுத்த பாவ்னி, முதல் ஆளாக காப்பாற்றப்பட்டது எப்படி என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 9 பேர் நாமினேஷனில் உள்ள நிலையில் பாவ்னியை மட்டும் இவர்கள் ப்ரோமோட் செய்வதை போல் காப்பாற்றுவது ஏன் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











