பிபி-6..’எனக்கு மேக் அப் கிட் அனுப்பல, ஜி.பி.முத்துவுக்கு மேக்கப் கிட்டா’?..செல்லமாய் கோபித்த சாந்தி

பிக்பாஸ் எனக்கு மேக் அப் கிட் அனுப்புங்க, முத்து அண்ணன் எல்லாம் மேக்கப் போட்டுக்கிட்டு இருக்காரு, எனக்கு அனுப்பலன்னு செல்லமாய் கோபித்தார் சாந்தி

பிக்பாஸ் வீட்டில் முகம் முழுவதும் சந்தனம் பூசி திருப்பாச்சி விஜய் போல் இருக்க அதைச் சொல்லி கலாய்த்தார் அமுதவாணன்.

பிக்பாஸ் வீட்டில் அவரவருக்கு உரிய பொருட்களைக்கூட இன்னும் அனுப்பாமல் இழுத்தடிக்கும் நிலையில் உள்ளனர்.

ஜி.பி.முத்து எனும் அலப்பறை பார்ட்டி

ஜி.பி.முத்து எனும் அலப்பறை பார்ட்டி

பிக் பாஸ் நிகழ்ச்சி சீரியஸாக சென்றாலும் சில நேரம் நகைச்சுவையாக மாறுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஜி.பி.முத்து போன்றவர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து பெரிய அளவில் ஸ்கோர் செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டில் பலருக்கும் இன்னும் அவரவர் பொருட்கள் மேக்கப் சாதனங்கள் வந்து சேரவில்லை. மூன்று நாட்களாக மேக்கப் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறார் சாந்தி. இந்த நிலையில் ஜி.பி.முத்து முகத்துக்கு ஃபேஷியல் செய்ததை பார்த்தவுடன் "பிக்பாஸ் எனக்கு மேக்கப் சாதனங்கள் அனுப்புங்கள் என்றால் முத்தண்ணனுக்கு அனுப்பி இருக்கீங்க என்று செல்லமாக கோபித்துக் கொண்டார் சாந்தி.

சந்திரமுகியாக மாறும் போட்டியாளர்கள்

சந்திரமுகியாக மாறும் போட்டியாளர்கள்

பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி மூன்று நாட்களை கடந்த நிலையில் உறுப்பினர்களின், போட்டியாளர்களின் சொந்த மனநிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட தொடங்கியுள்ளது. ஒவ்வொருவரும் தங்களுடைய இயல்பான நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். கேமரா முன் நடிப்பதை விட்டுவிட்டு தங்கள் இயல்பான மன நிலைக்கு மாறுவதை ரசிகர்களும் பார்த்து விமர்சித்து வருகின்றனர். முதல் இரண்டு நாட்களிலேயே ஆயிஷா, அசல் கோளார், தனலட்சுமி, ஜனனி உள்ளிட்டோர் தங்களுடைய இயல்பான நிலையை வெளி காண்பித்து சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

ஜாலியான மூடுக்கு மாறிய போட்டியாளர்கள்

ஜாலியான மூடுக்கு மாறிய போட்டியாளர்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சி என்பது உளவியல் ரீதியான ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம். எவ்வளவு பெரிய செலிபிரிட்டியாக இருந்தாலும் அவர்கள் மனதளவில் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள், உறவு முறைகளில், பழக்கம், நட்புக்குள் உள்ள நெருக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் பிக் பாஸ் சீசன் 6 -லும் இருக்கும். பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று காரசாரமாக போன நிலையில் ஒவ்வொருவரும் கடும் விவாதம் செய்து ஒரு விதமான இறுக்கமான நிலையில் படுக்கச் சென்றனர் ஆனால் காலையில் இதை அத்தனையும் மறைந்து ஜாலியான ஒரு மூடுக்கு அனைவரும் மாறி இருந்ததை காண முடிந்தது.

பிக்பாஸ் அநியாயம் பண்றீங்க கோபித்த சாந்தி

பிக்பாஸ் அநியாயம் பண்றீங்க கோபித்த சாந்தி

சாந்தி போன்றோர் கிச்சன் டீம் என்பதால் காலை 3 மணிக்கு படுக்கச் சென்றாலும், அதிகாலையில் எழுந்து குளித்து சமையல் செய்து கொண்டிருந்த மெட்டி ஒலி சாந்தி திடீரென படுக்கையறை பக்கம் திரும்பி பார்க்க அங்கு ஜி.பி.முத்து முகத்துக்கு சந்தனம் மூலம் ஃபேஷியல் செய்து கொண்டிருந்தார். இதை பார்த்து கடுப்பான சாந்தி, "பிக் பாஸ் எங்களுக்கு மேக்கப் கிட் அனுப்புங்க என்றால் இதுவரைக்கும் அனுப்பவே இல்ல. அங்க பாருங்க முத்து அண்ணா மேக்கப் போட்டுட்டு இருக்காரு. அவருக்கு போய் மேக்கப் கிட்ட அனுப்பி இருக்கீங்க, என்ன பிக் பாஸ் இப்படி பண்றீங்க" என்று செல்லமாக கடிந்து கொண்டார்.

முத்து அண்ணனுக்கு எல்லாம் மேக்கப் கிட் வந்துடுச்சு எனக்கு இன்னும் வரல- சாந்தி

முத்து அண்ணனுக்கு எல்லாம் மேக்கப் கிட் வந்துடுச்சு எனக்கு இன்னும் வரல- சாந்தி

கடந்த மூன்று நாளாக சாந்தி மேக்கப் கிட் வராததால் சாதாரணமாக பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள்தான் மேக்கப் அதிகம் விரும்புவார்கள், அதிலும் பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் தங்களை அழகாக காட்டிக் கொள்ள விரும்புவார்கள். சினிமா பிரபலமான சாந்தி மூன்று நாளாக மேக்கப் கிட் இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்க youtube பிரபலம் ஜி.பி முத்து மேக்கப் கிட்ட வாங்கி ஃபேஷியல் போட்டுக் கொண்டிருந்தது உறுப்பினர்களிடையே சிரிப்பு வரவழைத்தது ஜி.பி. முத்து முகத்துக்கு சந்தனத்தை பூசி கொண்டு நிற்பதை பார்த்து கடுப்பான சாந்தி கோபித்துக்கொண்டார்.

என் தலைவன் விஜய் திருப்பாச்சி போல சந்தனத்த பூசி நிக்கிற

என் தலைவன் விஜய் திருப்பாச்சி போல சந்தனத்த பூசி நிக்கிற

ஜி.பி. முத்து முகத்துக்கு சந்தனத்தை பூசி கொண்டு நிற்பதை பார்த்த அமுதவாணன் "என் தலைவன் திருப்பாச்சி படத்துல பூசி நிக்கிற மாதிரி நிக்கிற அவர் எதிரிகளை போட்டு தாக்குதாக்குனு தாக்குவாறு, நீ என்னன்னா ஈ, எறும்பை போட்டு தாக்கி கிட்டு இருக்கிற" அப்படின்னு ஜி.பி.முத்துவை போட்டு கலாய்ச்சிகிட்டு இருந்தாரு. இன்னொரு புறம் ஜிபி முத்து போட்ட ஹைல் ஹீல்ஸ் செருப்பை அமுதவாணன் கலாய்க்க நீ என்ன அமிதாப்பச்சன் உயரமோ, என்னைவிட ஒரு இஞ்சு கூட அதுக்கு இவ்வளவு பில்டப்பான்னு ஜி பி முத்து திருப்பி கலாய்த்தார்.இப்படி இன்று காலை அனைத்து இறுக்கமான மனநிலையும் கலைந்து பிக்பாஸ் வீடு இலகுவாக மாறியது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X