»   »  ஜாக்கிரதை... மறுபடியும் ஒரு பேய்ப் படம்!

ஜாக்கிரதை... மறுபடியும் ஒரு பேய்ப் படம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நாய்கள் ஜாக்கிரதை.. இது வீட்டுக்கு வீடு நாய் வைத்திருப்போர் வைத்திருக்கும் போர்டு. இதையே மாற்றி பேய்கள் ஜாக்கிரதை என்ற பெயரில் ஒரு படம் எடுத்து வருகின்றனர் கோலிவுட்டில்.

என்னதான் பாபநாசம், பாகுபலி என சினிமா பாதையை மாற்ற சிலர் முன்றாலும் பேய், பிசாசு ஆவி என்று அலைந்து கொண்டிருக்கத்தான் செய்கின்றனர் சிலர்.

அந்த வகையில் இடையில் சற்று கேப் வி்ட்டிருந்த பேய்ப் பட சீசன் மீண்டும் தலை விரித்தாடத் தொடங்கி விட்டது. அந்த வரிசையில் இணைகிறது இந்த பேய்கள் ஜாக்கிரதை.

கண்மணி இயக்கம்...

கண்மணி இயக்கம்...

கண்மணி என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார். நாயகனாக ஜீவரத்னம் நடிக்க நாயகியாக வருபவர் ஈஷான்யா.

நிறைய பேய்கள்...

நிறைய பேய்கள்...

படத்தில் நிறைய பேய்கள்.. ஸாரி நடிகர், நடிகைகள். ஒவ்வொருவரு முக பாவத்தையும் பார்த்தால் பேய்களே பயந்து விடும் போல. அப்படி இருக்கிறது.

ராஜேந்திரன்...

ராஜேந்திரன்...

நான் கடவுள் ராஜேந்திரன். பயங்கர வில்லனாக வந்து இடையில் காமெடிப் பீஸாகி, பாட்டெல்லாம் பாடி இப்போது என்ன வகையான நடிகர் என்றே தெரியாமல் போய் விட்டார். அவருக்கும் படத்தில் முக்கியப் பாத்திரமாம்.

தம்பி ராமையா...

தம்பி ராமையா...

காமெடியில் கலக்கி வரும் தம்பி ராமையாவும் படத்தில் இருக்கிறார். முக்கியக் கேரக்டர்தான் இவருக்கும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

பூமிகா...

பூமிகா...

வம்சம் சீரியலில் பூமிகாவாக வந்து அசத்தும் நடிகையும் இந்தப் படத்தில் இருக்கிறார். இவரும் பேயா அல்லது பேய்க்குத் தாயா என்பது தெரியவில்லை.

மனோபாலா...

மனோபாலா...

மனோபாலா, பிளாக் பாண்டி என பலரும் படத்தில் உள்ளனர். ஆளாளுக்கு ஒரு வகையில் பயமுறுத்துவார்கள் என்று தைரியமாக நம்பலாம்.

இது தான் கதை...

இது தான் கதை...

படத்தின் கதை குறித்து கண்மணி கூறுகையில், "உலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்களை நம்புபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் சந்திக்க நேர்கிறது. இந்த இருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடக்கிறது.

காமெடி பேய்...

காமெடி பேய்...

அச்சம்பவம் எதனால் நடைபெறுகிறது. அதற்கு பின் அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பங்கள் என்ன என்பது பற்றி எல்லாம் நகைச்சுவையாக சொல்லி இருக்கிறோம். கபிலன், விவேகாவின் பாடல் வரிகளில், மரிய ஜெரால்டு இசையில் இனிய பாடல்கள் ஒலிக்கும்" எண்றார் கண்மணி.

English summary
Peigal Jaakirathai is a upcoming Tamil Movie. Directed by Kanmani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil