»   »  பேய் இருக்கா இல்லையா... பேய்கள் ஜாக்கிரதை பாருங்க!

பேய் இருக்கா இல்லையா... பேய்கள் ஜாக்கிரதை பாருங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பேய்கள் இருக்கின்றனவா.. இல்லையா? எல்லோருக்குள்ளும் உள்ள இந்த கேள்விக்கு விடை தரும் வகையில் ஒரு படம் தயாராகிறது. அதுதான் பேய்கள் ஜாக்கிரதை.

பார்த்தேன் ரசித்தேன், ஜெமினி, ஜே.ஜே போன்ற வெற்றிபடங்களில் இணை இயக்குனரும், தெலுங்கு படவுலகில் நா ஊப்பிரி, கால் செண்டர், சீனோடு மற்றும் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற "பீருவா" உள்ளிட்ட பல படங்களை இயக்கியவருமான கண்மணி முதன் முறையாக இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

பேய்கள் ஜாக்கிரதை

பேய்கள் ஜாக்கிரதை

இன்றைய சினிமா ட்ரெண்டுக்கு ஏற்ப பேய்கள் ஜாக்கிரதை எனப் பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜீவரத்னம் கதாநாயகனாகவும், ஈஷான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

இரு பாத்திரங்கள்

இரு பாத்திரங்கள்

இவ்வுலகில் பேய்கள் இருக்கிறது என்று நம்பும் ஒரு கதாபாத்திரமும், பேய்கள் உள்ளது என்று கூறுபவன் மூடன் என்று கூறும் ஒரு கதாபாத்திரமும் ஒரு கட்டத்தில் சந்திக்க நேர்கிறது.

நகைச்சுவையுடன்..

நகைச்சுவையுடன்..

இவ்விருவரையும் இணைக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. அந்த சம்பவம் எதனால் நடைபெறுகிறது. சம்பவத்திற்கு பின் அவர்கள் படும் குழப்பங்களை நகைச்சுவை பிண்ணனியுடன் கலந்து கூறியிருக்கும் படம்தான் "பேய்கள் ஜாக்கிரதை".

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

ஸ்ரீ சாய் சர்வேஷ் எண்டர்டைன்மெண்ட் சார்பாக ஜி.ராகவன் அவர்கள் இப்படத்தை தயாரிக்கின்றார். மரிய ஜெரால்ட் இசையமைக்க, மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.

English summary
Peigal Jakkirathai is the new horror movie directed by debutant Kanmani.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil