»   »  ஏப்ரல் 22ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யாவின் 'பென்சில்'

ஏப்ரல் 22ல் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷ்-ஸ்ரீதிவ்யாவின் 'பென்சில்'

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜி.வி.பிரகாஷ், ஸ்ரீதிவ்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'பென்சில்' வருகின்ற 22 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் இந்தப் படத்தில் தான் ஹீரோவாக அறிமுகமானார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' ஹிட் கொடுத்த ஸ்ரீதிவ்யா, ஜி.வி.பிரகாஷின் முதல் படம் என்று இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது.


Pencil Released on April 22

ஆனால் அதற்குப் பின் அவரின் நடிப்பில் 'டார்லிங்', 'திரிஷா இல்லேன்னா நயன்தாரா' என 2 படங்கள் வெளியாகி ஹிட்டடிக்க, பென்சில் கிடப்பில் போடப்பட்டது.


அடுத்தடுத்த ஹிட்களால் அரைடஜன் படங்களில் ஜி.வி.பிரகாஷ் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 2 வருடங்களாகக் கிடப்பில் போடப்பட்ட பென்சிலுக்கு தற்போது விடிவுகாலம் பிறந்திருக்கிறது.


Pencil Released on April 22

ஆமாம் இப்படம் வருகின்ற 22ம் தேதி வெளியாகும் என்று தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்திருக்கிறார்.


தணிக்கையில் இப்படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
G.V.Prakash Tweeted "After 2 years of struggle finally pencil in theaters from April 22 .. With ur support and blessings".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil