»   »  ஆர்யாவுக்கு இவ்ளோ பெரிய மனசா: நம்ப முடியலயே பாஸு

ஆர்யாவுக்கு இவ்ளோ பெரிய மனசா: நம்ப முடியலயே பாஸு

Posted By:
Subscribe to Oneindia Tamil
டிஆர்பிக்காக இந்த பெண்ணை ஆடவிட்டு வேடிக்கை பார்க்கும் ஆர்யா...!!- வீடியோ

சென்னை: எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பார்ப்பவர்களால் ஆர்யாவின் செயல்களை நம்ப முடியவில்லை.

ஆர்யாவுக்கு பெண் தேடும் நிகழ்ச்சி எங்க வீட்டு மாப்பிள்ளை. இந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டு ஆர்யாவை மணக்கும் கனவோடு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்கள்.

ஆர்யாவும் அந்த பெண்களுடன் நன்றாக கடலை போடுகிறார்.

பெண்கள்

பெண்கள்

ஆர்யா அந்த பெண்கள் அனைவரிடமும் நெருக்கமாக பழகுகிறார். சர்வ சாதாரணமாக தோளில் கை போடுகிறார். இதை டிவியில் பார்க்கும் பெண்கள் ஆர்யாவை திட்டித் தீர்க்கிறார்கள்.

குடும்பம்

குடும்பம்

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள பெண்களின் நடவடிக்கைகளை பார்க்கும் பார்வையாளர்கள் இவர்களை பெற்றவர்களுக்கு வெ, மா, சூ, சொவே இல்லையா, இப்படி அனுப்பி வைத்துள்ளார்களே என்று கோபப்படுகிறார்கள்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

நம் கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி உள்ளது என்று பலரும் குமுறுகிறார்கள். நிகழ்ச்சிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

கடந்த காலம்

கடந்த காலம்

போட்டியில் கலந்து கொண்டுள்ள பெண்கள் தங்களின் முன்னாள் காதலர்கள் பற்றி ஆர்யாவிடம் தெரிவிக்க அவரோ பரவாயில்லை என்கிறார். ஒரு பெண் விவாகரத்தாகி தனக்கு ஒரு மகன் இருக்கிறார் என்று கூறியதை கூட ஆர்யா ஈஸியாக எடுத்துக் கொண்டார்.

நம்ப முடியவில்லை

நம்ப முடியவில்லை

ஆர்யா மற்ற பெண்களின் கடந்த காலத்தை கண்டுகொள்ளாமல் இருப்பதை பார்த்த பார்வையாளர்களோ அவருக்கு அவ்வளவு பெரிய மனதா, நம்பும்படி இல்லையே என்கிறார்கள்.

இறுதி

இறுதி

ஆர்யா நடந்து கொள்வதை எல்லாம் பார்த்தால் ஜாலியாக கடலை போட்டுவிட்டு கடைசியில் வெற்றி பெறுபவரை திருமணம் செய்வது போன்று தெரியவில்லை என்றே பலரும் கூறுகிறார்கள். ஆர்யா வெற்றியாளரை திருமணம் செய்கிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

English summary
People suspect actor Arya's actions in the television programme Enga Veetu Mapillai as he doesn't care about any of the contestants' past life.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X