»   »  பாகுபலி 2 படத்தை டவுன்லோடு செய்த 6 ஆயிரம் பேர்

பாகுபலி 2 படத்தை டவுன்லோடு செய்த 6 ஆயிரம் பேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையத்தில் வெளியான பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்பை இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளார்கள்.

ராஜமவுலி ஆண்டுக் கணக்கில் பார்த்து பார்த்து எடுத்த பாகுபலி 2 படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.


பின்னர் 11. 30 மணிக்கு படம் தமிழகத்தில் ரிலீஸானது.


இணையதளம்

இணையதளம்

தமிழகத்தில் படம் வெளியாகும் முன்பே பாகுபலி 2 தமிழ் பதிப்பு இணையதளத்தில் வெளியானது. இதனால் படக்குழு பேரதிர்ச்சி அடைந்தது. அவர்களின் கடின உழைப்பு வீணாகியுள்ளது.


டவுன்லோடு

டவுன்லோடு

இணையதளத்தில் வெளியான பாகுபலி 2 படத்தை இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டவுன்லோடு செய்துள்ளனர். படம் நல்ல தரத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.


முடக்கம்

முடக்கம்

பாகுபலி 2 படம் வெளியாகியுள்ள இணையதளங்களை முடக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டுள்ளது. முன்னதாக ராணா மன்னராக முடிசூடும் காட்சி இணையதளத்தில் லீக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.


விஷால்

விஷால்

திருட்டு விசிடியை ஒழிக்காவிட்டால் மே 30ம் தேதி முதல் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக விஷால் அறிவித்துள்ளார். இந்நிலையில் பாகுபலி 2 படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே இணையதளத்தில் வெளியானது குறித்து விஷால் என்ன செய்யப் போகிறார்?


English summary
According to reports, more than 6,000 people have downloaded the tamil version of Baahubali 2 that got leaked even before theatre release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil