For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பாலாஜியை ஒழிச்சிக்கட்ட துடிக்கும் ஹவுஸ்மேட்ஸ்.. காப்பாற்றிய மக்கள்.. இந்த வாரம் எவிக்‌ஷன் இருக்கா?

  |

  சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் பாலாஜி முருகதாஸ் வெளியேறக் கூடாது என மக்கள் காப்பாற்றி உள்ளனர்.

  Balaji Murugadoss Evicted? | Bigg Boss 4 Tamil • Day 20

  சுரேஷ் சக்கரவர்த்தி, சனம் ஷெட்டி சண்டை, பாலாஜி, அர்ச்சனா மோதல் என ஏகப்பட்ட பிரச்சனைகள் குறித்து கமல் பேசிய நிலையில், கடைசியாக முக்கியமான பணியான எலிமினேஷன் பற்றியும் கமல் கடைசியில் பேச ஆரம்பித்தார்.

  அதற்கு முன்னதாக ஹவுஸ்மேட்களுக்கு சின்னதாக ஒரு எவிக்‌ஷன் விளையாட்டையும் அரங்கேற்றினார்.

  எவிக்‌ஷன் லிஸ்டில் 5 பேர்

  எவிக்‌ஷன் லிஸ்டில் 5 பேர்

  இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்கிற பட்டியலில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி அர்ஜுனா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் மற்றும் ஆஜீத் ஆகிய 5 பேர் இடம் பிடித்துள்ளனர். இதில், நீங்க யாரையெல்லாம் வெளியேற்ற விரும்புறீங்க என இன்னொரு எவிக்‌ஷன் விளையாட்டை பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து கமல் விளையாடினார்.

  டிக் அடிக்கணும்

  டிக் அடிக்கணும்

  சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி அர்ஜுனா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் மற்றும் ஆஜீத் ஆகிய 5 பேர்களின் போட்டோக்கள் கொண்ட ஒரு சார்ட் கொண்டு வரப்பட்டு, அதில் ஒவ்வொரு போட்டியாளராக, உள்ளே இருக்க வைக்க விரும்புவருக்கு டிக் போடுங்க, வெளியே போகணும்னு நினைக்கிறவருக்கு ராங் போடுங்க என்றார்.

  ஆஜீத்துக்கு அதிகம்

  ஆஜீத்துக்கு அதிகம்

  ஆஜீத்திடம் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் இருப்பதால், அதை அவருக்கு விட்டுக் கொடுத்த ரம்யா பாண்டியன் உள்பட பல ஹவுஸ்மேட்கள் ஆஜீத்தை வீட்டை விட்டு வெளியேற்ற விரும்புகிறோம் என்றனர். அப்போ தான் ஆஜீத்தும் போக மாட்டான், யாருமே போகாம எல்லாரும் ஹேப்பியா இருப்போம்னு அதை வேல்முருகன் வெளிப்படையாவே சொன்னார்.

  ஈ அடிச்சான் காப்பி நிஷா

  ஈ அடிச்சான் காப்பி நிஷா

  ரியோ ராஜ் என்ன விளையாடுறாரோ அதை அப்படியே ஈ அடிச்சான் காப்பி பண்ணுவதில், நிஷாவை விட படு கெட்டிக்காரி வேற யாருமே இல்லை. அந்த அளவுக்கு ஆஜீத்துக்கு ரியோ டிக் போட்டா நிஷாவும் போடுறது, பாலாஜிக்கு ராங் போட்டா நிஷாவும் போடுறதுன்னு செம காண்டு ஏத்துறாங்க..

  பாலாஜி மேல காண்டு

  பாலாஜி மேல காண்டு

  அர்ச்சனா அக்காவை ஓப்பனா பாலாஜி எதிர்த்ததுல இருந்தே ஹவுஸ்மேட்களுக்கு அவர் மேல கோபம் அதிகமாகிடுச்சு, அதுவும், டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போதும், என்னை யாரும் அவன் இவன்னு சொல்லாதீங்க என ஆர்டர் போட்டதும் யாருக்குமே பிடிக்கல, அதனால, பாலாஜியை வெளியே அனுப்பிடணும்னு ஒரு முடிவுல பலரும் ராங் போட்டாங்க..

  மக்கள் யாரை சேவ் பண்ணாங்க

  மக்கள் யாரை சேவ் பண்ணாங்க

  பிக் பாஸ் ஹவுஸ்மேட்ஸ் அதிகமாக ராங் போட்டு பாலாஜியை ஒழித்துக் கட்ட நினைச்சாலும், அதிகமான ஓட்டுப் போட்டு பாலாஜியை மக்கள் காப்பாற்றி உள்ளார்கள் என கமல் சொன்னதும், பாலாஜிக்கு சந்தோஷம் செமயா பொங்கியது. அடுத்த வாரம் தலைவராகிட்டு, உங்களை எல்லாம் வச்சி செய்றேன் என்கிற ரேஞ்சுலயே பார்க்க ஆரம்பிச்சாரு பாலாஜி.

  யாராச்சும் வெளிய போவாங்களா?

  யாராச்சும் வெளிய போவாங்களா?

  இந்த வாரம் யாராச்சும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போவாங்களா? என்கிற கேள்வி தான் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆஜீத் போக போறது இல்லை. பாலாஜியும் சேவ். சுரேஷ் தாத்தா, அனிதா, ஆரி இந்த மூன்று பேரில் ஒருவரை வெளியே அனுப்பிடுவாங்களா? இல்லை அடுத்த வாரம் தான் எலிமினேஷன் இருக்குமா? அப்புறம் சுசித்ரா எப்போ வராங்க? என பிக் பாஸ் ரசிகர்கள் இன்றைய எபிசோடை காண ஒரே ஆவலாக உள்ளனர்.

  English summary
  People saved Balaji Murugadoss from elimination this week in Bigg Boss Tamil season 4. Latest buzz circulates none of them will exit from Bigg Boss house this week.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X