»   »  முதல் ஐமேக்ஸ் தியேட்டர்... விலையைப் பற்றிக் கவலைப்படாமல் வரிசை கட்டும் மக்கள்!

முதல் ஐமேக்ஸ் தியேட்டர்... விலையைப் பற்றிக் கவலைப்படாமல் வரிசை கட்டும் மக்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐமேக்ஸ் தியேட்டர் பற்றி செய்திகள் வரும்போதெல்லாம், நம்ம ஊருக்கு இப்படி ஒரு தியேட்டர் வராதா என ஏங்கினர் ரசிகர்கள். குறிப்பாக ஹைதராபாத் பிரசாத் ஐமேக்ஸில் படம் பார்த்தவர்கள் தங்கள் அனுபவங்களைக் கூறும்போது பெரும் ஏக்கம் பிறக்கும்.

அந்தக் குறையைப் போக்கும் விதமாக சத்யம் சினிமாக்காரர்கள் வேளச்சேரி பீனிக்ஸ் மாலில் முதல் ஐமேக்ஸை அமைத்தார்கள். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்க தாமதமானதால், பீனிக்ஸ் மாலில் இருந்த பதினோரு அரங்குகளில் பத்து அரங்குகள் மட்டும் செயல்பட்டன. முதல் அரங்கமான ஐமேக்ஸ் மூடியே கிடந்தது.

People show great interest to see the first Imax

இப்போது ஜாஸ் சினிமா நிறுவனம் பீனிக்ஸ் மாலில் உள்ள லக்ஸ் அரங்கங்களை வாங்கிவிட்டது. அடுத்த சில மாதங்களில் ஐமேக்ஸுக்கு அனுமதி கிடைத்து, இன்று முதல் காட்சி தொடங்கியும்விட்டது.

இன்னும் இரு ஐமேக்ஸ் அரங்குகள் சென்னையில் தயாராக உள்ளன. அவற்றில் ஒன்று வடபழனி விஜயா மாலில் உள்ளது. இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. அடுத்தது, வேளச்சேரி கிராண்ட் மாலில் உள்ள பிவிஆரில். இந்த இரு ஐமேக்ஸ் அரங்குகளும் திறந்துவிட்டால், ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

People show great interest to see the first Imax

பீனிக்ஸ் மாலில் இப்போது திறக்கப்பட்டுள்ள ஐமேக்ஸ் அரங்கில் கட்டணம் ரூ 360. 3 டி கண்ணாடிக்கு ரூ 30. ஆன்லைன் ரிசர்வேஷனுக்கு ரூ 30 கூடுதல் கட்டணம், பார்க்கிங்குக்கு ரூ 160 வரை போகிறது. கொறிக்க திண்பண்டங்கள், குளிர்பானம் குறைந்தது ரூ 150 வரை செலவாகும்.

இவ்வளவு காஸ்ட்லி தியேட்டர் என்றாலும், ஒரு முறையாவது ஐமேக்ஸ் அனுபவத்தைப் பெற வேண்டும் என்பதால் முன்பதிவு செய்ய அலைமோதுகிறார்கள் மக்கள். அதுவும் ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரைப் பார்க்க அத்தனை ஆர்வம் காட்டுகின்றனர்.

English summary
People shows great interest in seeing the first Imax theater in the state, Luxe.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil