»   »  நான் ஒன்னும் காரணம் இல்லாமல் ரஜினியை கபாலி ஆக்கவில்லை: ரஞ்சித்

நான் ஒன்னும் காரணம் இல்லாமல் ரஜினியை கபாலி ஆக்கவில்லை: ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தை முதல் நாளே காலி பண்ண சிலர் முயற்சித்தார்கள். நான் காரணம் இல்லாமல் ரஜினியை கபாலியாக்கவில்லை என்று இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்டோர் நடித்த கபாலி படம் வெற்றி பெற்றுள்ளது. படம் 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இது குறித்து ரஞ்சித் கூறுகையில்,

கபாலி

கபாலி

கபாலி படத்தை நான் என்ன நினைத்து எடுத்தேன் என்பது எனக்கு தெரியும். என் நோக்கம் நிறைவேறிவிட்டது. கபாலி படத்தை முதல் நாளே காலி பண்ண சிலர் முயற்சிப்பார்கள் என்று நான் எதிர்பார்த்தது போன்றே நடந்தது. சிலர் முதல் நாளே படத்தை எதிர்த்தார்கள்.

வெற்றி

வெற்றி

எதிர்ப்பாளர்களை மக்கள் கண்டுகொள்ளவில்லை. அவர்களின் எண்ணம் நிறைவேறவில்லை. அவர்களின் பேச்சை மக்கள் கேட்டிருந்தால் 25 நாட்களாக படம் தியேட்டர்களில் அதுவும் ஹவுஸ்ஃபுல்லாக ஓடாது.

கமர்ஷியல் வெற்றி

கமர்ஷியல் வெற்றி

கபாலி கமர்ஷியலாக வெற்றி அடைந்தால் தான் முற்போக்கு சிந்தனை உள்ள படங்கள் நிறைய வரும். இது தோல்வி அடைந்தால் முற்போக்கு சிந்தனைகள் பற்றி யாரும் பேச மாட்டார்கள். அதனாலேயே கபாலி வெற்றி அடைய வேண்டும் என நினைத்தேன்.

அட்டகத்தி

அட்டகத்தி

என்னுடைய அட்டகத்தி படம் தோல்வி அடைந்திருந்தால் எனது கருத்துகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு வெற்றி பெறும் வகையில் வேறு விதமாக யோசித்திருப்பேன். அட்டகத்தி வெற்றி பெற்றதால் மெட்ராஸ் படத்தை எடுத்தேன். அதுவும் வெற்றி அடைந்ததால் கபாலியை எடுத்தேன். கபாலியும் வெற்றி பெற்றுள்ளதால் இதே போன்று மேலும் சில படங்களை இயக்க உள்ளேன்.

ரஜினி

ரஜினி

கபாலியில் பிரச்சனை உள்ளது என தெரிந்தும் அதை மக்களிடம் கொண்டு செல்ல நினைத்தோம். அதற்கு எனக்கு ரஜினி என்னும் சூப்பர் ஸ்டாரின் பிம்பம் தேவையாக இருந்தது. நான் யார் மூலமாக பேச வேண்டும் என நினைத்தேனோ அவர் மூலமாகவே பேசியுள்ளேன்.

காது கிழியுதுல்ல?

காது கிழியுதுல்ல?

ரஜினியின் குரலின் சப்தம், வீரியம் அனைவரின் காதுகளையும் கிழித்துள்ளது என நினைக்கிறேன். அடுத்து அந்த குரல் அனைவரின் வீடுகளிலும் டிவி மூலம் கேட்கும். இப்படம் குறித்து பல விவாதங்கள் நடந்தது எனக்கு மகிழ்ச்சி தான்.

English summary
Director Ranjith said that some people tried to stop his movie Kabali on the very first day of its release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil