மக்கள் என்னை காப்பாற்றுவார்கள்...பிரியங்காவிடம் தில்லாக சொல்லும் தாமரை
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி, 70 நாட்களை கடந்து அடிதடி சண்டை, போட்டா போட்டி என பயங்கர சுவாரஸ்யமாக சென்று கொண்டிருக்கிறது. ஃபினாலே ரவுண்ட் துவங்கி விட்டதால் போட்டி கடுமையாகி வருகிறது.
நிகழ்ச்சியின் பத்தாவது வாரமான இந்த வாரத்தின் துவக்கத்தில் வழக்கம் போல் நாமினேஷன் நடைபெற்றது. ஆனால் இதன் இறுதியில் அனைவரையும் நாமினேட் செய்வதாக பிக்பாஸ் தெரிவித்தார். இதனால் இந்த வாரம் அனைவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

புதிய டாஸ்க்
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 72 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முதல் ப்ரோமோவில், நாமினேஷனில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் அனைவரும் கார்டன் ஏரியாவில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்தில் ஏற வேண்டும்.

ராஜு – தாமரை சண்டை
போட்டியாளர்களை வெளியேற்ற பல தடைகள் ஏற்படுத்தப்படும். அவற்றை எதிர் கொண்டு போட்டியாளர்கள் பேருந்திற்குள் இருக்க வேண்டும் என டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கின் போது ராஜு மற்றும் தாமரை இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

தட்டி கேட்பேன்
இதைத் தொடர்ந்து இரண்டாவது ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், பேருந்திற்குள் இருக்கும் தாமரையும், பிரியங்காவும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்கள். யாருக்கு அநியாயம் நடந்தாலும் தான் தட்டி கேட்பதாக பிரியங்கா சொல்கிறார். பிக்பாஸ் கொடுக்கும் தடைகளை தாண்டி நீ கூடுதலாக தடை செய்கிறாய் என்கிறார்.

அசரவே மாட்டுறியே நீ
நீ எதுக்குமே அசர மாட்டுறியே. இப்படியே உட்காந்து இருக்கியே என்கிறார் பிரியங்கா.இதில் உனக்கு என்ன பிரச்சனை என பதிலுக்கு கேட்கும் தாமரை, மறுத்து பேச வரும் பிரியங்காவை பேச விடாமல் வாயை மூடு. என்னை பேச விடு. மக்கள் என்னை காப்பாற்றுவார்கள் என தில்லாக நம்பிக்கையுடன் சொல்கிறார் தாமரை.

இதுக்கு ஒரு முடிவே இல்லையா
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த தாமரை, பிரியங்கா சண்டைக்கு ஒரு முடிவே இல்லையா. இது தான்டா டாஸ்க். முதல் சீசனில் நடத்தப்பட்ட கார் டாஸ்கை நினைவுபடுத்துகிறது. பிரியங்கா ஸ்டிராங் பிளேயர். தாமரை சவுண்ட் ஓவரா இருக்கே என கலாய்த்து கமெண்ட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











