»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

முதலில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் நடிகைகள் மாடலாகத் தோன்ற ஆரம்பித்தனர். அது அவர்களுக்கு மகத்தானவெற்றியைக் கொடுத்தது. கூடவே டிவியிலும், சினிமாவிலுமாகத் தோன்றி கிராமத்திலிருந்து நகரம் வரைஅனைவரையும் டிவி முன் தவம் கிடக்க வைத்தார்கள்.

சில நடிகைகள் வர ஆரம்பித்ததால் ஒட்டுமொத்த சினிமாவையே விளம்பர ஜூரம் பிடித்து ஆட்டியது. அடுத்த பலஹூரோயின்கள், ஹீரோக்கள் விளம்பரங்களில் தோன்ற ஆரம்பித்தார்கள்.

உதாதரணமாக சிரஞ்சீவி தம்ஸ் அப் விளம்பரத்தில் தோன்றியதும் அவரும் பாப்புலரானார். தம்ஸ் ஆப்பும்பாப்புலரானது. இதையடுத்து பெப்ஸி விளம்பரத்தில் பவன் கல்யாண் தோன்றினார்.

பட், இப்போ விஜய் டிரென்ட். கோக் விளம்பரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் விஜய்.தமிழ்த்திரையுலகில் நம்பர் ஒன் ஹீரோவாகத் திகழும் நடிகர் விஜய் இப்போது இளைஞர்கள் மத்தியில் ரொம்பவும்பாப்புலர்.

சமீபத்தில் வெளியான பத்ரி படத்தில் பல ஆக்ரோஷமான காட்சிகளில் நடித்த விஜய் தினமும் 6 பாட்டில்கள் கோக்குடிக்கிறாராம்.

கோக் விளம்பரப்படத்தை ராஜீவ்மேனன் இயக்குகிறார். பெரும்பாலும் இந்த விளம்பரப்படத்தின் காட்சிகள்எல்லாம் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. விரைவில் நம்ம வீட்டு டிவியில் வரும் கோக் விளம்பரத்தில் விஜயைக்காணலாம்.

விஜய் நடிக்கும்போது அஜித் நடிக்காமல் இருந்தால் எப்படி? ஷூட்டிங் விளம்பரம் ஒன்றில் நடிக்கிறாராம் அஜித்.அந்த விளம்பரத்தை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். விரைவில் இந்த விளம்பரம் வெளியாக உள்ளது.

ஆனால் நம்ம டும் டும் டும் மாதவனோ ஏற்கனவே பெப்ஸி, பஜாஜ் விளம்பரங்களில் நடித்தவர்.

பார்த்தேன் ரசித்தேன் பிரசாந்த ஹீரோ ஹோண்டா விளம்பரத்தில் நடிக்கிறார்.

சிம்ரனும் ஒரு விளம்பரத்தில் நடிக்கிறார் என்பது லேட்டஸ்ட் தகவல்.

சாதாரணமாகவே நம்ம வீட்டு டிவிக்களில் திரும்ப திரும்ப ஒளிபரப்பாகும் விளம்பரமும், அதில் நடிக்கும்மாடல்களும் நமக்கு ரொம்பவும் தெரிந்த முகமாகி விடுகிறார்கள். நமக்கும் அவர்களுடன் ஒரு அந்நியோன்னியம்வந்து விடுகிறது.

விளம்பரங்களில் நடிக, நடிகையர்கள் நடித்தால் அவர்களுக்கும் பாப்புலாரிட்டி கிடைக்கும். சம்பந்தப்பட்டபொருட்களும் அமோகமாக விற்பனையாகும். இதுதான் மார்க்கெட்டைப் பிடிக்கும் புதிய யுக்தி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil