»   »  பேய் சீஸனுக்கு பை.... இப்போ 'பீரியட்' மோகத்தில் தமிழ் சினிமா!

பேய் சீஸனுக்கு பை.... இப்போ 'பீரியட்' மோகத்தில் தமிழ் சினிமா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் என்ற ஒன்று உண்டு. ஒரு பேய் படம் ஹிட் ஆனால் தொடர்ந்து பேய் படங்களாக வந்து வரிசை கட்டும். அந்த ட்ரெண்டுக்கு இப்போது மூடுவிழா நடத்தினார்கள். இருந்தாலும் ஒன்றிரண்டு பேய் படங்கள் (ஆல்ரெடி ப்ளான் பண்ணியவை) வரவிருக்கின்றன. இந்நிலையில் சுமார் அரை டஜன் படங்கள் பீரியட் படங்களாக உருவாகி வருகின்றன.

சந்தன தேவன்


ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இயக்குநர் அமீர் இயக்கி நடிக்கும் படம். காதாநாயகர்களாக ஆர்யாவும் அவரது தம்பி சத்யாவும் நடிக்கிறார்கள். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் படம். 1960களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க பீரியட் படமாகத்தான் உருவாகிறது.


வேலைக்காரன்

வேலைக்காரன்

சிவகார்த்திகேயன் நடிக்க மோகன் ராஜா இயக்கும் வேலைக்காரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு இரண்டு ரோல்களாம். மில் தொழிலாளியாக சிவகார்த்திகேயனும் முதலாளியாக பிரகாஷ்ராஜும் நடிக்கும் காட்சிகள் 1940களில் நடப்பது போல எடுக்கப்பட்டுள்ளன. இது முழுக்க பீரியட் படமாக இல்லாமல் இப்போதைய காலகட்டத்திலும் கதை நடப்பது போல உருவாகிறது.


அட்லீ - விஜய்

அட்லீ - விஜய்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் விஜய்க்கு மூன்று கேரக்டர்கள். இதில் அப்பா கேரக்டர் கதை 1980களில் நடக்கும் கதை. ஒரு கைதியின் டைரி போலவே அமைந்திருக்கிறது கதை என்கிறார்கள். தலைப்பு மூன்று முகம் என்று சிலரும், ஒரு கைதியின் டைரி என்று சிலரும் கூறி வருகின்றனர். இதிலும் பீரியட் காட்சிகளுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள்.


தானா சேர்ந்த கூட்டம்

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா நடிக்க விக்னேஷ் சிவன் இயக்கும் படம் தானா சேர்ந்த கூட்டம். ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 படத்தின் அன் அஃபிஷியல் ரீமேக் என்கிறார்கள். இதிலும் ஒரு முக்கியமான பகுதி பீரியட் காலத்தில் நடப்பது போல கதை இருக்கிறதாம். அதற்காக ஸ்பெஷல் செட் போட்டிருக்கிறார்கள்.


வட சென்னை

வட சென்னை

வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகவிருக்கும் இந்த படத்திலும் பீரியட் காட்சிகள் நிறைய உண்டு. மூன்று காலகட்டங்களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டிருக்கிறது.


நாச்சியார்

நாச்சியார்

ஜோதிகா, ஜிவி.பிரகாஷ் நடிக்க பாலா இயக்கும் படமான நாச்சியார் படத்துக்கும் பீரியட் செட் போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.


ரஜினி - ரஞ்சித் படம்

ரஜினி - ரஞ்சித் படம்

சூப்பர் ஸ்டாரை வைத்து ரஞ்சித் மீண்டும் இயக்கும் படமும் ஒரு பீரியட் படம் தானாம். தாவூத்துக்கே குருவாக விளங்கிய மும்பைத் தமிழ் தாதா ஒருவரின் கதை என்கிறார்கள்.


பாகுபலி 2

பாகுபலி 2

இது எந்த காலகட்டப் படம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இன்னும் இரு வாரங்களில் திரையைத் தொடுகிறது இந்த வரலாற்றுப் படம்.


சமீபத்தில் வெளியான காற்று வெளியிடையும் ஒரு பீரியட் படம் தான். கார்கில் போர் சமயத்தில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டிருந்தது.


- ஆர்ஜிEnglish summary
After the end of Horror season, now Kollywood film makers showing great interest in making period movies.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil