»   »  உலக திரைப்பட விழாவில் பெரியார்'

உலக திரைப்பட விழாவில் பெரியார்'

Subscribe to Oneindia Tamil


கோவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவுக்கு பெரியார்', அம்முவாகிய நான் ஆகிய படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Click here for more images
இத் தகவலை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிருபர்களிடம் தெரிவித்தார். அவர் கூறுகையில்,

பெரியார் படம் 100 நாட்களுக்கும் மேலாக ஓடி சாதனை படைத்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் பெரியார் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந் நிலையில் கோவாவில் நடக்கும் உலக திரைப்பட விழாவுக்கு 2 தமிழ் படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று பெரியார். இந்த படத்தை இந்தியில் டப் செய்து வட மாநிலங்களிலும் திரையிட முடிவு செய்துள்ளோம்.

உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி லக்ளென பல்கலைக்கழகத்தில் பெரியார் சிலையை வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். அந்த சிலை திறப்பு விழாவிலேயே இந்தியில் டப் செய்யப்பட்ட பெரியார் படம் திரையிடப்படும்.

இந்தி தவிர பிற இந்திய மொழிகளிலும், பிரெஞ்சு உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் பெரியார் படத்தை டப்பிங் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் வீரமணி.

உடனிருந்த சத்யராஜ் கூறுகையில்,

பெரியார் படம் எனக்கு பெரிய அங்கீகாரத்தையும் தனி மரியாதையையும் பெற்றுத் தந்திருக்கிறது. இந்த படம் வியாபார ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது தான் பெரிய சந்தோஷம்.

பெரியார் வேடம் ஒரு சவாலான பாத்திரம். பெரியாருடைய நடை, உடை, பாவனைகளை பழைய வீடியோ பதிவுகளை போட்டுப் பார்த்து அறிந்து கொண்டேன். மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு ஐயா கூட படத்தைப் பார்த்துவிட்டு என்னை பாராட்டினார். சினிமா ஆர்வம் இல்லாத அந்த பெரியவரிடமிருந்து கிடைத்த பாராட்டால் நான் மிகவும் நெகிழ்ந்து போய்விட்டேன் என்றார்.

பெரியார் பட இயக்குனர் ஞானராஜசேகரன் ஐ.ஏ.எஸ். கூறுகையில்,

ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசின் சார்பில் உலக திரைப்பட விழாவுக்கு வித்தியாசமான கதை அம்சம் கொண்ட 21 படங்கள் தேர்வு செய்யப்படும். இந்த ஆண்டு 119 படங்கள் போட்டியிட்டன. இதில் தமிழில் பெரியாரும், அம்முவாகிய நான் படமும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரு படங்களும் வெவ்வேறு நாடுகளில் நடைபெறும் உலக திரைப்பட விழாக்களில் மத்திய அரசின் அதிகாரப்பூர்வ படங்களாகத் திரையிடப்படும் என்றார்.

Read more about: periyar

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil