»   »  ஒரு நைட்டுக்கு வரியா, பணம் தருகிறேன்: அத்துமீறியவர் மீது பிரபல நடிகை புகார்

ஒரு நைட்டுக்கு வரியா, பணம் தருகிறேன்: அத்துமீறியவர் மீது பிரபல நடிகை புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகையும், மாடலுமான கோய்னா மித்ரா.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் கோய்னா மித்ரா. பாலிவுட் நடிகை, மாடல். மும்பையில் வசித்து வருகிறார். தெரியாத எண்களில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் அவருக்கு 40-50 அழைப்புகள் வந்துள்ளது.

Pervert sexually harasses actress Koena Mitra

முதலில் அதை கண்டுகொள்ளாமல் இருந்த அவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு வந்த செல்போன் அழைப்பை எடுத்து பேசினார். மறுமுனையில் பேசிய ஆண் ஒரு இரவு என்னுடன் வா, எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறி அசிங்கமாக பேசியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் மீது கோய்னா மும்பை ஓஷிவாரா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Bollywood actress cum model Koena Mitra filed a sexual harassment case against a pervert at the Mumbai police station.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil