»   »  எஸ்3 ரிலீஸையொட்டி ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறாராம் சூர்யா.. பீட்டா கொழுப்புப் பேச்சு!

எஸ்3 ரிலீஸையொட்டி ஜல்லிக்கட்டை ஆதரிக்கிறாராம் சூர்யா.. பீட்டா கொழுப்புப் பேச்சு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூர்யா தனது எஸ்3 படத்திற்கு விளம்பரம் தேட ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக பீட்டா அமைப்பு அவரை விளாசியுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு எதிரான பீட்டா அமைப்பை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு தமிழகத்தில் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

PETA India slams Suriya for supporting Jallikattu

இது குறித்து அறிந்த பீட்டா இந்தியா நிர்வாகி நிகுஞ் சர்மா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சூர்யா தனது எஸ்3 படம் ரிலீஸாக உள்ளதால் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசியுள்ளார். சட்டவிரோதமாக அண்மையில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டிகளின்போது காளைகள் மற்றும் மனிதர்கள் உயிர் இழந்துள்ளனர்.

PETA India slams Suriya for supporting Jallikattu

காயங்கள் மற்றும் மரணம் ஏற்படுத்தும் கொடூரமான முறையை, உச்ச நீதிமன்றம் தடை செய்து கண்டித்துள்ளதை படத்தின் விளம்பரத்திற்காக ஆதரிப்பது நல்லது அல்ல என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
PETA India slammed actor Suriya who supported Jallikattu saying that he decided to speak as his movie S3 is about to release.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil