Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
எங்களால் தானே இவ்வளவு அசிங்கம்.. லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்ட பீட்டர் பாலின் மனைவி!
சென்னை: லக்ஷ்மி ராமகிருஷ்ணனை வனிதா விஜயக்குமார் அசிங்கமாக பேசிய நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Recommended Video
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றின் நேர்க்காணலில் வனிதா விஜயக்குமாரும் நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணனும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய நடிகை வனிதா லக்ஷ்மி ராமகிருஷ்ணனை கடுமையான வார்த்தைகளால் பேசினார். வயதி வித்தியாசம் இன்றி அவளே இவளே என படு மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டி தீர்த்தார்.
அவதூறு பரப்புகிறார்கள்.. கஸ்தூரி உட்பட 3 பேர் மீது போலீஸில் வனிதா புகார்.. பரபரக்கும் கோலிவுட்!

ஆதரவும் எதிர்ப்பும்
அந்த வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்திலும் வெளியிட்டார். இதனை பார்த்த பலரும் வனிதாவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்தனர். நடிகை கஸ்தூரி லக்ஷ்மி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டிவிட்டினார். வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

போலீஸில் புகார்
இதனால் கஸ்தூரியிடமும் மோதலில் ஈடுபட்டார் நடிகை வனிதா. வனிதா, லக்ஷ்மி ராமகிருஷ்ணன், கஸ்தூரி ஆகியோருக்குள் ஏற்பட்ட வார்த்தை போரால் டிவிட்டர் தளமே அல்லோகளப்பட்டது. தொடர்ந்து கஸ்தூரி, லக்ஷ்மி, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் மீது போலீஸிலும் புகார் அளித்தார் வனிதா.
|
லக்ஷ்மியிடம் மன்னிப்பு
இந்நிலையில் வனிதா தரக்குறைவாகவும் ஆபாசமாகவும் பேசியதற்காக பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் லக்ஷ்மி ராமகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை லக்ஷ்மி தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பெண்ணை அழிப்பது அல்ல
மேலும் எந்த தவறும் செய்யவில்லை இருப்பினும் எலிசபெத் மன்னிப்பு கேட்கிறார், அவர் எங்களை சிக்கலில் ஆழ்த்தியதாக நினைக்கிறார்! அவர் ஒரு வலிமையான பெண். பெண்ணியம், அதிகாரம் என்பது மற்றொரு பெண்ணை அழிப்பது அல்ல என்றும் லக்ஷ்மி குறிப்பிட்டுள்ளார்.

ரொம்ப கஷ்டமா இருக்கு
அந்த வீடியோவில் எலிசபெத் பேசியிருப்பதாவது, எங்களுக்காகதான் லக்ஷ்மி பேசினாங்க. ஆனால் வனிதா, அவங்களை ரொம்ப தரக்குறைவா, மட்டமா, அசிங்கமா பேசி அவங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டாங்க. அவங்க நியாயத்துக்காகதான் கேட்டாங்க. ஆனா வனிதா அவங்க வயசுக்கு கூட மரியாதை கொடுக்காம கெட்ட வார்த்தையால் பேசியது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.

எங்களாலதான் இந்த அசிங்கம்
ரெண்டு நாளா அதுவே ரொம்ப கஷ்டமா இருக்கு. நம்மளால இப்படி ஆயிடுச்சேன்னு ரொம்ப ஃபீலிங்கா இருக்கு. அவங்க அப்படி பண்ணினதுக்கு நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்குறேன். எங்களாலதான் உங்களுக்கு இப்படி ஒரு அசிங்கம் வந்தது.

ஐ ஃபீல் வெரி சாரி
வயசு வித்தியாசம் பார்க்காம அவங்க அப்படி பேசினது ரொம்ப தப்பு. அவங்க மன்னிப்பு கேட்குறாங்களோ இல்லையோ அது வேற விஷயம். எங்களுக்காகதான் நீங்க இறங்கினீங்க. அவங்க பேசினது எங்களுக்கே ரொம்ப கஷ்டமா இருக்கு உங்களுக்கு எப்படி இருந்திருக்குட் ஐ ஃபீல் வெரி சாரி ஃபார் தட் மேடம், தேங்க்யூ மேடம். என தெரிவித்துள்ளார்.