»   »  மதம் குறித்து அவதூறுப் பேச்சு... கமல் மீது வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு!

மதம் குறித்து அவதூறுப் பேச்சு... கமல் மீது வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வள்ளியூர்: இந்து மதத்தை அவதூறாகப் பேசியதாகக் கூறி நடிகர் கமல் ஹாஸன்ே மீது வள்ளியூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டின.

Petition to file case on Kamala Hassan at Valliyur court

இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின.

இந்நிலையில் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய வேண்டும் என வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் இன்று மனு தாக்கல் செய்தார்.

அவர் பெயர் ஆதிநாத சுந்தரம். நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த பழவூரைச் சேர்ந்தவர். பக்கத்து ஊரான அஞ்சுகிராமத்தில் வியாபாரம் செய்து வரும் இவர் வள்ளியூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 12-ந்தேதி தனியார் தொலைக்காட்சிக்கு நடிகர் கமலஹாசன் பேட்டியளித்தார். அப்போது அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தி அவதூறாக பேசியுள்ளார். எனவே நடிகர் கமலஹாசன் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று வலியுறுத்தியுள்ளார்.

English summary
An Hindu religious activist has filed a petition to sue a case against actor Kamal Hassan for insulting Hindus.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil