»   »  நடிகர் சங்க பொதுக் குழுவை லயோலா கல்லூரியில் நடத்த எதிர்ப்பு.. நீதிமன்றத்தில் மனு!

நடிகர் சங்க பொதுக் குழுவை லயோலா கல்லூரியில் நடத்த எதிர்ப்பு.. நீதிமன்றத்தில் மனு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கப் பொதுக் குழுக் கூட்டத்தை லயோலா கல்லூரியில் நடத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

இந்தக் கூட்டத்தை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Petition filed against Nadigar Sangam GB meet at Loyola College

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் நவம்பர் 27-ம் தேதி ஞாயிற்றுக் கிழமையன்று மதியம் 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் உள்ள பெட்ரம் அரங்கில் நடைபெற உள்ளது.

நடிகர் சங்க தலைவர் நாசர் கூட்டத்துக்கு தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் விஷால் வரவேற்றுப் பேசுகிறார். துணைத் தலைவர் கருணாஸ் 2015-2016-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கை மற்றும் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவுக் கணக்குகளைப் பொதுக்குழு கூட்டத்தில் சமர்ப்பித்து ஒப்புதல் பெறுகிறார்.

பொருளாளர் கார்த்தி சங்கத்தின் எதிர்காலப் பொருளாதாரத் திட்டங்களைப் பற்றி விளக்கமளிக்கிறார். பொதுச் செயலாளர் விஷால், கடந்தகால நிர்வாகச் செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பொதுக்குழுவில் ஒப்புதல் கோரவுள்ளார். நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முன்னணித் திரைநட்சத்திரங்கள் மற்றும் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சங்கப் பொதுக்குழுக் கூட்டத்தை லயோலா கல்லூரியில் நடத்தக் கூடாது என்று பத்திரிகையாளர் சுஜிதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

English summary
A petition has filed in Madras High Court against the annual general body meeting conduct at Loyola College.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil