twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினியின் #Petta படத்தில் உள்ள ஓட்டைகள்

    By Siva
    |

    சென்னை: ரஜினியின் பேட்ட படத்தில் நிறைய ஓட்டைகள் உள்ளன.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுத்தீன் சித்திக்கி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியானது.

    படம் ரிலீஸாவதற்கு முன்பே ஓவராக பில்ட்அப் கொடுத்திருந்தார்கள்.

    ஓட்டைகள்

    ஓட்டைகள்

    பேட்ட படத்தில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ரிலீஸுக்கு முன்பு கொடுத்த ஓவர் பில்ட்அப்பால் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ஆனால் படத்தை பார்த்தபோது அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஏமாற்றமே மிஞ்சியது. பில்ட்அப் கொடுக்காமல் இருந்திருந்தால் ஏமாற்றம் ஏற்பட்டிருக்காதோ?

    கடுப்பு

    கடுப்பு

    ரஜினியை சூப்பர் ஸ்டாராக அல்ல மாறாக கடவுள் அளவுக்கு காண்பித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். ஒரு வெறியனாக அவர் ரஜினியை கொண்டாடுவது புரிகிறது. ஆனால் எதற்கெடுத்தாலும் அவரால் மட்டுமே முடியும் என்று திரும்பத் திரும்ப அனைவரும் கூறுவதை குறைத்திருந்திருக்கலாம்.

    எரிச்சல்

    எரிச்சல்

    படம் ரொம்ம்ப்ப்ப நீளமாக உள்ளது. இடைவேளை எப்பொழுது வரும் என்று ஏங்க வைத்துவிடுகிறது. அதன் பிறகு இரண்டாம் பாதி முடிவதற்குள் தியேட்டர்களில் உள்ளவர்கள் பொறுமையை இழந்துவிடுகிறார்கள். படம் முழுக்க ரஜினி வருகிறார், நல்லது. பழைய ரஜினியை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது கார்த்திக் சுப்புராஜுக்கு ஏன் புரியவில்லை. ரஜினியை கொண்டாடுவதில் எதார்த்தத்தை தொலைத்துவிட்டார் கார்த்திக்.

    சிம்ரன்

    சிம்ரன்

    படத்தில் சிம்ரன், த்ரிஷா ஆகியோர் பெயருக்கு வந்துவிட்டு போகிறார்கள். ரஜினியின் படம் என்பதால் அந்த கதாபாத்திரங்களில் அவர்கள் நடிக்க ஒப்புக் கொண்டிருப்பார்கள். இரண்டு நல்ல நடிகைகளை வேஸ்ட் செய்துவிட்டார்கள். விஜய் சேதுபதிக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டான கதாபாத்திரம் கொடுத்திருந்திருக்கலாம். நவாசுத்தீன் சித்திக்கியை மேலும் பயன்படுத்தியிருக்கலாம்.

    முதுமை

    முதுமை

    ரஜினி நடக்கும்போதும், கொனட்டும்போதும் ஸ்டைலாக உள்ளார் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால் டான்ஸ் ஆடும்போதும், சண்டை போடும்போதும் ஜாக்கிரதையாக இருப்பது தெரிகிறது. என்னதான் இளமையாக காட்டினாலும் வயதானது தெரிகிறது. அது இயற்கையே. ரஜினி ஹீரோவாக நடிப்பதை விட்டுவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்லும் நேரம் வந்துவிட்டதை இயக்குனர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

    எதிர்பார்ப்பு

    எதிர்பார்ப்பு

    ட்ரெய்லரில் சொன்ன சிறப்பான தரமான சம்பவம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இறுதியில் அந்த சம்பவத்தை பார்க்கும்போது ப்ப்பூ இவ்வளவு தானா என்று சலித்துக் கொள்ள வைத்துவிட்டது. ரஜினியின் நடிப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவர் சிறப்பான நடிகர். ஆனால் அவர் சூப்பர் ஹீரோவில் இருந்து சூப்பர் அப்பா ஆகும் நேரம் வந்துவிட்டது.

    English summary
    Karthik Subbaraj has worshipped Rajinikanth in Petta but lost his identity in the making of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X