twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழக அரசு பேருந்தில் 'பேட்ட': ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி #StopPiracy

    By Siva
    |

    சென்னை: பேட்ட படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும்போது தமிழக அரசு பேருந்தில் திருட்டு டிவிடி மூலம் காண்பிக்கப்பட்டுள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    அமெரிக்காவிலும் தொடர்ந்து நல்ல வசூல் செய்து வருகிறது.

    பேட்ட

    கரூரில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பேருந்தில் பேட்ட படத்தை திருட்டுத்தனமாக போட்டுக் காண்பித்ததை பார்த்த ரஜினி ரசிகர்கள் அது குறித்து சமூக வலைதளத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

    விஷால்

    ரஜினி ரசிகர்களின் புகார் ட்வீட்டை பார்த்த விஷால் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது, பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டு டிவிடிகள் மூலம் படம் காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

    ஆதாரம்

    பேட்ட படத்தை திருட்டுத்தனமாக போட்டுக் காண்பித்த அரசு பேருந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.

    திருட்டுத்தனம்

    திருட்டுத்தனம்

    பேட்ட படம் ரிலீஸான சில மணிநேரங்களில் அதன் ஹெச்.டி. பிரிண்ட்டை வெளியிட்டது தமிழ் ராக்கர்ஸ். முதலில் தமிழ் ராக்கர்ஸை பிடிங்க அதன் பிறகு மற்றவர்கள் அடங்கி விடுவார்கள் என்கிறார்கள் நெட்டிசன்கள்.

    English summary
    Petta(pirated version) is shown in SETC bus heading to Chennai from Karur.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X