பேட்ட... எய்ட்டீஸ் கிட்ஸ் ரொம்ப ரொம்ப ஹேப்பி அண்ணாச்சி!

பேட்ட படத்தில் ரஜினியின் தோற்றத்தால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பேட்ட படத்தில் ரஜினியின் இளமையான தோற்றத்தைப் பார்த்து ரஜினி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் கடந்தவாரம் ரிலீசாகி, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கபாலி, காலா என தன் முந்தைய சில படங்களில் வயதான தோற்றத்தில் நடித்திருந்த ரஜினி மீண்டும் இப்படத்தில் இளமையான துள்ளலான தோற்றத்தில் நடித்துள்ளார்.

அதோடு ரஜினி படங்களுக்கே என உள்ள சில எழுதப்படாத இலக்கணங்கள் மீண்டும் இப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எல்லா வயதிலும் ரசிகர்கள்:

எல்லா வயதிலும் ரசிகர்கள்:

ரஜினிக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை என எல்லா வயதிலும் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்குக் காரணம் அவரது படத்தில் இடம்பெறும் ஆபாசமில்லாத நகைச்சுவை, அவரது முகபாவங்கள், துள்ளலான நடிப்பு போன்றவை தான். நிஜத்தில் வயதானபோதும், படத்தில் அது பிரதிபலிக்காமல் பார்த்துக் கொண்டார் ரஜினி.

பிடிச்சிருக்கு.. ஆனா, பிடிக்கலை:

பிடிச்சிருக்கு.. ஆனா, பிடிக்கலை:

ஆனால், பேட்டக்கு முந்தைய சில படங்களில், பாலிவுட்டில் அமிதாப் செய்து வருவது போல, தனது வயதிற்கு பொருத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அப்படங்களில் தானே முன் வந்து, வயதான கதாபாத்திரத்தில் அவர் நடித்தார். ரசிகர்களுக்கு அப்படங்கள் பிடித்திருந்தாலும், அவர்கள் அதை அவரிடம் தொடர்ந்து எதிர்பார்க்கவில்லை.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

எப்போதும் தங்களது தலைவர் இளமையாகவே இருக்க வேண்டும் என அவர்கள் விரும்பினர். அதோடு அவரது ஸ்டைல், நகைச்சுவையான பேச்சு போன்றவற்றையும் அவர்கள் மிகவும் எதிர்பார்த்தனர். இதனாலேயே பேட்ட படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானதும், ரஜினியின் தோற்றத்தைப் பார்த்து அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

ரசிகர்கள் திருப்தி:

ரசிகர்கள் திருப்தி:

தற்போது படத்திலும் அவரது தோற்றம் மற்றும் நடிப்பைப் பார்த்து அவர்கள் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக எண்பதுகளில் பிறந்த குழந்தைகளான, தற்போது 35 பிளஸ் வயதில் இருப்பவர்கள், பேட்ட படத்தில் ரஜினியின் தோற்றத்தை மிகவும் ரசித்து வருகின்றனர். அந்தப் பழைய ரஜினியைப் பார்த்துவிட்ட திருப்தி அவர்களுக்கு.

ஒரு வரி விமர்சனம்:

தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் சிலர் மீம்ஸ்களும் வெளியிட்டு வருகின்றனர். பேட்ட படத்தின் இசையமைப்பாளரான அனிருத்தும் இது தொடர்பான மீம்ஸ் ஒன்றைத் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஒரே வரியில் பேட்ட படத்தின் விமர்சனம் என இந்த மீம்ஸை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X