சன் பிக்சர்ஸ் அடிக்க, கே.ஜே.ஆர். பதிலடி கொடுக்க: ட்விட்டரில் கலகல மோதல்
சென்னை: சன் பிக்சர்ஸும், கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸும் ப்ரொமோ வீடியோ வெளியிட்டு ட்விட்டரில் மோதிக் கொண்டிருக்கின்றன.
பேட்ட படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 100 கோடி வசூலித்தது என்று சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் அறிவித்தது. இது என்ன பிரமாதம், விஸ்வாசம் தமிழகத்தில் மட்டும் ரூ. 125 கோடி வசூலித்துவிட்டது என்று அதன் தமிழக உரிமையை வாங்கிய கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ட்வீட்டியது.
இந்நிலையில் ட்விட்டரில் இந்த இரண்டு பேருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ப்ரொமோ
பேட்ட படத்தில் வரும் கதாபாத்திரங்கள் கெக்கே பிக்கே என்று சிரிப்பது போன்ற ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ். அந்த வீடியோவின் முடிவில் ரஜினி நீங்கள் எல்லாம் மாறவே மாட்டீங்களாடா, டேய் போடா என்கிறார்.
விஸ்வாசம்
சன் பிக்சர்ஸின் வீடியோவுக்கு பதிலடி கொடுப்பது போன்று ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளது கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ். அதில் உங்க மேல கொல கோபம் வரணும், ஆனால் உங்கள எனக்கு புடுச்சிருக்கு சார், அதனால் லாங்கு லிவ்வு, ஹேப்பி லைஃபு மிரட்டு என்று அஜித் கூறுகிறார்.
ரசிகர்கள்
கே.ஜே.ஆர். வெளியிட்டுள்ள வீடியோவுக்கு தல ரசிகர் ஒருவர் அர்த்தம் கண்டுபிடித்துள்ளார்.
சிரிச்சு முடியல
சன் பிக்சர்ஸ், கே.ஜே.ஆர். இடையேயான மோதல் குறித்த இந்த வீடியோவை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலிக்கிறது பாஸ்.


Click it and Unblock the Notifications











