»   »  பட வாய்ப்பு வாங்கித் தருவதாக பெண் டாக்டரை பலாத்காரம் செய்த போட்டோகிராபர்

பட வாய்ப்பு வாங்கித் தருவதாக பெண் டாக்டரை பலாத்காரம் செய்த போட்டோகிராபர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சி: அமெரிக்காவை சேர்ந்த மலையாள பெண் டாக்டருக்கு படங்களில் வாய்ப்பு வாங்கிக் கொடுப்பதாகக் கூறி அவரை பலாத்காரம் செய்த புகைப்படக் கலைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்கா குடியுரிமை பெற்று அங்கு பல் டாக்டராக இருக்கும் மலையாள பெண்(வயது 24) ஒருவர் படங்களில் நடிக்க ஆசைப்பட்டு இந்தியா வந்தார்.

படப்பிடிப்பு தளத்தில் வைத்து அவர் புகைப்பட கலைஞரான கேரளாவை சேர்ந்த ஜின்சன் லோனப்பனை(33) சந்தித்துள்ளார்.

 சினிமா

சினிமா

சினிமா படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக ஜின்சன் அந்த பெண்ணிடம் வாக்குறுதி அளித்துள்ளார். இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் காண்பிக்க என்று கூறி அந்த பெண்ணை நிர்வாணமாக புகைப்படம் எடுத்துள்ளார்.

 நடிகர்கள்

நடிகர்கள்

பல நடிகர்களுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஜின்சன் அந்த பெண்ணிடம் காட்ட அவரும் நம்பிவிட்டார். இதையடுத்து ஜின்சன் அந்த பெண்ணின் வீட்டில் வேலை செய்பவர் மூலம் அவர் பற்றிய தகவல்களை சேகரித்தார்.

சக்தி

சக்தி

தன்னிடம் அபூர்வ சக்தி உள்ளது என்று கூறி ஜின்சன் ஒரு நாள் மெழுகுவர்த்தியை ஏற்றி அதன் முன்பு அமர்ந்து அந்த பெண் பற்றி சேகரித்த தகவல்களை எல்லாம் கூறியுள்ளார். தகவல்களை தனக்கு அரிய சக்தி தெரிவித்ததாக பொய் சொல்லியுள்ளார்.

 பொய்

பொய்

பட வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி அவர் பலமுறை அந்த பெண்ணுடன் படுக்கையை பகிர்ந்துள்ளார். ஜின்சனுக்கு திருமணமான விஷயம் அண்மையில் தான் அந்த பெண்ணுக்கு தெரிய வந்து அதிர்ந்தார்.

கைது

கைது

அந்த பெண் தான் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்க ஜின்சன் செக் அளிக்க அது பவுன்ஸ் ஆகியுள்ளது. இதையடுத்து அந்த பெண் ஜின்சன் மீது போலீசில் பலாத்கார புகார் அளிக்க அவர்கள் அவரை கைது செய்தனர். ஜின்சன் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala police have arrested a 33-year old photographer with the malayalam film industry for raping a US dentist promising movie roles.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil