»   »  "தல கிளிக்ஸ்".. ஆழ்வார்ப்பேட்டைக்குப் போனால் பார்க்கலாம்!

"தல கிளிக்ஸ்".. ஆழ்வார்ப்பேட்டைக்குப் போனால் பார்க்கலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் அஜித் எடுத்த புகைப்படங்கள் ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் இருக்கும் ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அஜித் சினிமாவை தாண்டி பல விஷயங்களில் தன்னுடைய ஆர்வத்தைக் காட்டி வருகிறார். பைக் ரேஸ், புகைப்படம் எடுப்பது, சமையல் போன்ற விஷயங்களில் அவருக்கு ஆர்வம் அதிகம். அவர் செய்யும் பிரியாணிக்கு திரையுலகைச் சேர்ந்த பலர் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

 Photographs taken by Ajith are kept in public view

அஜித் சமீபகாலமாக, புகைப்படக்கலையில் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். நடிகர் அப்புக்குட்டியை வைத்து அவர் நடத்திய ஃபோட்டோஷூட் வைரல் ஆனது. இந்நிலையில், இதுவரை அஜித் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் ஃபோகஸ் ஆர்ட் கேலரியில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அங்கே சென்று புகைப்படங்களைப் பார்த்த 'விவேகம்' படத்தின் இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்துடன் அஜித்திற்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Read more about: ajith, photography, அஜித்
English summary
Photographs taken by Ajith are kept in public view. Director siva watched that photographs yesterday.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil