ஆயாள்... அந்தரங்க காட்சிகளில் அமர்க்களப்படுத்திய லீனா!
திருவனந்தபுரம்: ஆயாள் என்ற மலையாளப் படத்தில் அந்தரங்கமான காட்சிகளில் நடிகை லீனா அபிலாஷ் படு தத்ரூபமாக நடித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. காரணம்- அவர் இப்படிப்பட்ட ரோலில் நடித்திருப்பது இதுவே முதல் முறை என்பதால்.
ஆயாள் படத்தில் படுக்கை அறைக் காட்சிகள் நிறைய. அத்தனைக் காட்சிகளிலும் அவ்வளவு இலகுவாக நடித்துள்ளாராம் லீனா.
சுரேஷ் உன்னிதன் இயக்கியுள்ள இப்படத்தில் வரும் படுக்கை அறை நெருக்கமான காட்சிகளில் அவர் நடித்துள்ள விதம், அனைவராலும் சிலாகித்துப் பேசப்படுகிறதாம். இதுகுறித்து லீனா கூறியுள்ளதாவது...

படத்துக்குத் தேவையாச்சே...
நான் லாலுடன் நடித்துள்ள சில படுக்கை அறைக் காட்சிகள் படத்துக்குத் தேவையானது. கதையுடன் ஒருங்கிணைந்தது. எனவேதான் நடித்தேன்.

வெட்கமில்லை.. கூச்சமில்லை
இந்தக் காட்சிகளில் நடித்தபோது நான் வெட்கப்படவில்லை. கூச்சப்படவில்லை. சவுகரியமாகத்தான் உணர்ந்தேன்.

கலை நயத்துடன்
இந்த படுக்கை அறைக் காட்சிகளை ஆபாசமாக எடுக்கவில்லை இயக்குநர். மாறாக கலைநயத்துடன், இயல்பாக வரும்படி எடுத்துள்ளார் என்றார் லீனா.

2 பொண்டாட்டிக் கதை
ஆயாள் படம் 2 மனைவிகள் கதையாகும். லால் தான் நாயகனாக நடித்துள்ளார். 2 மனைவிகள் தவிர இன்னொரு பெண்ணுனுடன் உறவு வைக்கிறார் லால். அந்த 3வது பெண்ணாக வருகிறார் லீனா. மனித உறவுகளை சித்தரிக்கும் படமாம் இது.


Click it and Unblock the Notifications











