»   »  மொட்டை, லிப் டூ லிப் முத்தம்: துணிந்து ரிஸ்க் எடுக்கும் நடிகை

மொட்டை, லிப் டூ லிப் முத்தம்: துணிந்து ரிஸ்க் எடுக்கும் நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அபியும் அனுவும் படத்தில் பியா பாஜ்பாய், டொவினோ தாமஸ் லிப் டூ லிப் கொடுக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

பி.ஆர். விஜயலட்சுமி இயக்கி வரும் படம் அபியும் அனுவும். இந்த படத்தில் பியா பாஜ்பாய், பிரபல மலையாள நடிகர் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார்கள்.

இந்த படம் மூலம் டொவினோ தாமஸ் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.

பியா

பியா

படத்தில் பியா, டொவினோ லிப் டூ லிப் முத்தம் கொடுக்கும் காட்சி உள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது. கதைக்கு தேவை என்பதால் அந்த காட்சியை படமாக்கியதாக இயக்குனர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

இளம் தலைமுறை

இளம் தலைமுறை

முத்தக் காட்சியில் நடிக்க வேண்டும் என்றதும் பியாவும், டொவினோவும் ஒத்துழைப்பு அளித்ததாக விஜயலட்சுமி கூறியுள்ளார். இந்த படத்தில் இளம் தலைமுறையினருக்கு பிடித்த பல விஷயங்கள் உள்ளதாம்.

மொட்டை

மொட்டை

அபியும் அனுவும் படத்திற்காக மொட்டை போட்டுள்ளார் பியா பாஜ்யபாய். மொட்டை அடித்தால் தான் அந்த நிஜமான உணர்வு வரும் என்பதால் பியா துணிந்து அப்படி செய்துள்ளார்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

விஜயலட்சுமி பலகாலம் கழித்து இயக்கியுள்ள இந்த அபியும் அனுவும் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பிரபு, சுஹாசினி, ரோஹினி, மனோபாலா உள்ளிட்டோரும் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.

English summary
Abhiyum Anuvum is in the news again for the intense lip lock scene involving Pia Bajpai and Tovino Thomas.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil