»   »  தலைப்புல என்ன இருக்கு... படத்தோட கதை சரியா இருந்தா சரி!- ஏ ஆர் முருகதாஸ்

தலைப்புல என்ன இருக்கு... படத்தோட கதை சரியா இருந்தா சரி!- ஏ ஆர் முருகதாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ஆன்டனி இசையமைத்து நாயகாக நடித்துள்ள புதிய படம் ‘பிச்சைக்காரன்' இசை வெளியீடு இன்று சென்னையில் நடந்தது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் ஏ ஆர் முருகதாஸ், ஸ்டான்லி, பாலாஜி சக்திவேல், சுசீந்திரன், எஸ்.ஆர்.பிரபாகரன், சக்திவேல் பெருமாள்சாமி, நடிகர்கள் விதார்த், அசோக், தயாரிப்பாளர் சிவா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


முருகதாஸ்

முருகதாஸ்

இந்த விழாவில் முருகதாஸ் பேசுகையில், "ஒருமுறை நான் ஸ்டான்லி உள்ளிட்ட நண்பர்களுடன் பேசிக்கிட்டிருக்கும்போது, சசியை பற்றி கேட்டேன். இப்போது விஜய் ஆண்டனியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் சசி என ஸ்டான்லி என்று கூறினார்.


தலைப்பை மாத்துங்க

தலைப்பை மாத்துங்க

தலைப்பு என்ன என்று கேட்டபோது, அவர் தெரியவில்லை என்று சொன்னார். பிறகு சிறிது நேரம் கழித்து எனது காதில் சசி படத்தின் தலைப்பு ‘பிச்சைக்காரன்' என்று மெதுவாக சொன்னார். உடனே, நானும் அவருடைய காதில் ‘உடனடியாக இந்த தலைப்பை மாற்றச் சொல்லுங்கள்' என்று மெதுவாக சொன்னேன்.


அதிர்ச்சி

அதிர்ச்சி

அதன்பிறகு, ஒரு நிகழ்ச்சியில் சசியை சந்திக்க நேர்ந்தது. அப்போது சசி என்னிடம் ஓடிவந்து எப்படியாவது தலைப்பை மாற்றிவிடுகிறேன் என்று சொல்லிவிட்டுச் சென்றார். பிறகு, படத்தின் போஸ்டர்கள் எல்லாம் வெளிவந்தபோது, அதே தலைப்பை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். என்னடா, இது நாம் தலைப்பை மாற்ற சொன்னோம். ஆனால், இன்னும் மாற்றவில்லையே என்று வருத்தப்பட்டேன்.


பொருத்தமான தலைப்புதான்

பொருத்தமான தலைப்புதான்

ஆனால், இப்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ஆகியவற்றை கேட்கும்போது, இந்த தலைப்பு இப்படத்திற்கு சரியாக பொருந்தியிருக்கிறது என்று யோசிக்கத் தோன்றுகிறது. எப்போதும் ஒரு படத்தோட தலைப்பை வைத்து அந்த படத்தை குறை சொல்லிவிட முடியாது. தலைப்பு என்பது ஒரு படத்திற்கு குறியீடு மட்டுமே.. கதைதான் முக்கியம்," என்றார்.


English summary
Director AR Murugadoss says that title is just like a symbol for a movie, but content is important.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil