»   »  'பிச்சைக்காரன்' படத்தை தடை செய்ய கோரி கமிஷனரிடம் அந்தணர்கள் சங்கம் மனு

'பிச்சைக்காரன்' படத்தை தடை செய்ய கோரி கமிஷனரிடம் அந்தணர்கள் சங்கம் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகியிருக்கும் பிச்சைக்காரன் படத்தை தடை செய்ய வேண்டும் என, அந்தணர்கள் சங்கம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளது.

அந்தணர் முன்னேற்றக் கழகம் என்ற சங்கத்தின் சார்பில் நேற்று சென்னை கமிஷனர் டி.கே.ராஜேந்திரனிடம் கோரிக்கை மனு ஒன்று கொடுக்கப்பட்டது.


Pichaikaran Movie Ban Issue

அந்த மனுவில் சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்தை தடை செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.


இந்துக்கள் புனிதமாக மதிக்கும் காயத்ரி மந்திரம், வன்முறை காட்சிகளுக்கு பின்னணி இசையாக பிச்சைக்காரன் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.


கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களை, பிச்சைக்காரர்கள் போல இழிவாக பேசும் காட்சிகளும், பிச்சைக்காரன் படத்தில் இடம் பெற்றுள்ளது.


அதனால் அந்த படத்தை தடை செய்யவேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை மனுவை கொடுப்பதற்காக ஏராளமான அர்ச்சகர்கள் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Pichaikaran Movie should be banned, the Brahmins Association has Petitioned the Chennai Police Commissioner.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil