»   »  மார்ச் 4ஆம் தேதி முதல் விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன்'!

மார்ச் 4ஆம் தேதி முதல் விஜய் ஆன்டனியின் 'பிச்சைக்காரன்'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் ஆன்டனியின் அடுத்த படமான பிச்சைக்காரன் வரும் மார்ச் 4-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.

விஜய் ஆண்டனி, சத்னா டைட்டஸ் இணையாக நடிக்க, சசி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பிச்சைக்காரன்'.


இந்தப் படத்தை கேஆர் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்காலார்க் நிறுவனம் வெளியிடுகிறது.


Pichaikkaran from March 4th

படம் குறித்து வெளியீட்டாளர் கேஆர் பிலிம்ஸ் சரவணன் கூறுகையில், "தமிழ் திரை உலகத்துக்கு இது நல்ல வேளை என்றுதான் சொல்ல வேண்டும். நல்ல தரமான கதை அம்சம் உள்ளப் படங்கள் வெளி வருவதும், வெற்றி பெறுவதும் எங்களைப் போன்ற விநியோகஸ்தர்களுக்கு ஊக்கம் தருகிறது. அந்த ஊக்கமே 'பிச்சைக்காரன்' போன்ற தரமான கதை உள்ள படமும் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை தருகிறது.


ரசிகர்கள் இடையேயும் திரை அரங்கு உரிமையாளர்கள் இடையேயும் இன்று விஜய் ஆண்டனிக்கு கிடைத்து இருக்கும் வரவேற்பு அவரவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி எனலாம். இயக்குநர் சசிக்கு ரசிகர்கள் இடையே இருக்கும் கண்ணியமான வரவேற்பு மிகப் பெரியது. 'பிச்சைக்காரன்' அதை இருமடங்காக்கும் என்பதில் எங்களுக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு," என்கிறார்.

English summary
Vijay Antony's Pichaikkaran movie will be hit the screens on March 4th worldwide.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil