»   »  பிச்சைக்காரனுக்கு யு சான்று... சாதிப்பாரா சசி?

பிச்சைக்காரனுக்கு யு சான்று... சாதிப்பாரா சசி?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சொல்லாமலே படம் மூலம் இயக்குநரான சசிக்கு, அந்தப் படத்துக்குப் பிறகு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. அமைந்த வாய்ப்புகளை அவரும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவுமில்லை.

டிஷ்யூம், பூ, 555 போன்றவை அப்படி வீணாய் போன வாய்ப்புகளே.


இப்போது அவருக்கு இன்னுமொரு நல்ல வாய்ப்பு, விஜய் ஆன்டனி மூலம் வந்திருக்கிறது. அதுதான் பிச்சைக்காரன்.


Pichaikkaran gets U

சமீபமாக திரைக்கு வரவிருக்கும் படங்களில் ரசிகர்களிடம் அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள படம் அது.


யு சான்று பெற்றுள்ள 'பிச்சைக்காரன்' படத்தின் விநியோக உரிமையை கே ஆர் பிலிம்ஸ் சரவணன் வாங்கியுள்ளார். படம் குறித்து அவர் கூறுகையில், "இந்தப் படத்துக்கு 'U' சான்றிதழ் கிடைத்து இருப்பது எங்களுக்கு மிக மிக சந்தோசம். இந்தப் படத்தை ரசிகர்கள் தங்களது குடும்பத்தாருடன் வந்து ரசிக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகிறோம். அடுத்த மாதம் வெளி வர உள்ள 'பிச்சைக்காரன்' திரை அரங்கு உரிமையாளர்கள், ரசிகர்கள் என்று அனைவரையும் கவரும் என்பதில் சந்தேகமில்லை," என்கிறார்.


இந்தப் படம் தனக்கு பெரும் திருப்பு முனையாக அமையும் என சசியும் நம்புகிறார்.

English summary
Sasi's next Vijay Antony starrer Pichaikkaran has got clean U certificate from censor.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil