twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஷங்கரின் ‘ஐ’.. பவர் ஸ்டாரின் ‘ஐ’.. எப்படி சொன்னா ஷங்கருக்கு பிடிக்கும்?

    By Mayura Akilan
    |

    நூறு கோடி பட்ஜெட்டில் விக்ரமை வைத்து ஷங்கர் 'ஐ' என்ற படத்தை எடுத்தாலும் எடுத்தார். அதைப் பற்றி இணையதளத்தில் உலா வரும் செய்திகளுக்கு பஞ்சமே இருப்பதில்லை.

    ஐ ஹீரோ விக்ரமை விட அதில் சில சீன்கள் மட்டுமே பவர்ஸ்டார் பற்றி மட்டுமே அதிக அளவில் செய்திகள் வெளியாகி ஷங்கரை டென்சனுக்கு ஆளாக்குகிறதாம்.

    போதாக்குறைக்கு படத்தின் பட்ஜெட் பற்றியும் சூட்டிங் பற்றியும் கூட சுடச் சுட போட்டோவுடன் செய்திகள் வெளியாவதில் ஷங்கர் படு அப்செட் ஆக இருக்கிறாராம். இதனால் விளக்கம் அளித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஷங்கர்.

    ஷங்கருக்கும் பி.சிக்கும் தகராறாமே?

    ஷங்கருக்கும் பி.சிக்கும் தகராறாமே?

    டைரக்டர்களுக்கு எப்பவுமே தன் சொல்பேச்சு கேட்கிற கேமராமேன்களைதான் பிடிக்கும். ஆனால் ஐ படத்தில் பணியாற்றும் கேமராமேன் பி.சி. ஸ்ரீராம், கேமராமேன் மட்டுமல்ல, அவரே கைதேர்ந்த டைரக்டரும்கூட. இதனால், ஷங்கரின் பிளானிங் தொடர்பாக பி.சி., சில டாமினேஷன்களை செய்ததில், முறுகிக் கொண்டார்கள் இருவரும். இதனால் பொசுக்கென்று கோபித்துக் கொண்டு கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டார்.

    தூது போன ஹீரோ

    தூது போன ஹீரோ

    இருவருமே கோபத்தில் இருக்க படத்தின் தயாரிப்பாளரும், ஹீரோ விக்ரமும், இன்னும் சில பெரிய மனிதர்களும் இந்த கோபத்தை சரி செய்ய பி.சி. வீட்டுக்கே கிளம்பி போனார்களாம். அப்புறம் இயக்குநர் ஷங்கரும் நாலு படி கீழே இறங்கி வர, தனது பிடிவாதத்தை விட்டுக் கொடுத்து இரண்டு படி இறங்கி வந்தாராம் பி.சி.ஸ்ரீராம்.

    படத்தின் பட்ஜெட் 150 கோடியா?

    படத்தின் பட்ஜெட் 150 கோடியா?

    படத்தின் பட்ஜெட் 150 கோடி என்றும் தகவல்கள் இறக்கை கட்டிப் பறந்தன. ஆனால் இதுபோன்ற தகவல்கள் இனியும் வரக்கூடாது என்பதில் கவனம் செலுத்தியுள்ள ஷங்கர் சில விளக்கங்களை அளித்திருக்கிறார்.

    ரூ.100 கோடிதான் பட்ஜெட்

    ரூ.100 கோடிதான் பட்ஜெட்

    ஐ படத்தின் பட்ஜெட் நூறு கோடிக்கும் குறைவுதான். படத்தின் பட்ஜெட் 150 கோடியை தொடப்போகிறது என வெளியான தகவல் வெறும் வதந்திதான் என்கிறார் ஷங்கர்.

    சீனாவா? கொடைக்கானலா?

    சீனாவா? கொடைக்கானலா?

    ஐ படத்திற்காக சீனா, பாங்காக், ஜோத்பூர், கொடைக்கானால் பொள்ளாச்சி, சென்னை ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளனர். சீனாவில் எடுக்க முடியாமல் போன காட்சிகளை கொடைக்கானலில் செட் போட்டு எடுத்ததாக செய்திகள் வெளியானது. இதுவும் தவறான தகவல்தான் என ஷங்கர் மறுத்திருக்கிறார்.

    4 பாட்டு முடிஞ்சிருச்சே

    4 பாட்டு முடிஞ்சிருச்சே

    விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடித்துவரும் இந்தப் படத்தின் மூன்றில் இரண்டு பகுதி படமாக்கப்பட்டுவிட்டன. இதில் நான்கு பாடல் காட்சிகள், மூன்று ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வசனப்பகுதிகள் அடக்கம்.

    மிரட்டப் போகும் மேக்அப்

    மிரட்டப் போகும் மேக்அப்

    மேக்கப்புக்காக இவர்கள் கைகோர்த்திருக்கும் கம்பெனி. லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் சீரிஸின் மூலம் ரசிகர்களை மட்டுமின்றி ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் போன்ற ஜாம்பவான்களையும் டெக்னிக்கலாக மிரட்டிய பீட்டர் ஜாக்சனின் வீட்டா வொர்க் ஷாப்புடன் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இவர்கள்தான் படத்தின் முக்கியமான மேக்கப் பகுதிகளை வடிவமைத்திருக்கின்றனராம்.

    English summary
    Maverick director Shankar, who is known for erecting rich and expensive sets, has done the same for his forthcoming movie I starring Vikram and Amy Jackson. And the balance 1/3rd of the movie will be full 'N full Weta Workshop's craft.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X