»   »  பரபரப்பான பாலிவுட்டை இதமாக்க வந்த 'பிக்கு'!

பரபரப்பான பாலிவுட்டை இதமாக்க வந்த 'பிக்கு'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட்டே நடிகர் சல்மான் கானின் வழக்கால் தடதடத்துக் கிடக்கும் இந்த நேரத்தில் பிக்கு படம் வெளிவந்துள்ளது.

நடிகை தீபிகா படுகோனே, பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், நடிகர் இர்பான் கான் இவர்களுடன் நடிகர் அக்சய் ஓபராய் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடித்து இருக்கிறார்.

சுஜித் சிர்கார் இயக்கி இருக்கும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை ஜூகி சதுர்வேதி எழுத அனுபம் ராய் இசை அமைப்பில் படம் வெளிவந்துள்ளது. நடிகை தீபிகா இதில் நடிகர் அமிதாப் பச்சனின் மகளாக நடித்து இருக்கிறார். தீபிகாவுக்கு ஜோடி நடிகர் இர்பான் கான்.

கதைச் சுருக்கம் :

கதைச் சுருக்கம் :

கதை பெங்காலில் நடப்பது போல் படமாக்கப்பட்டுள்ளது. ந்தையாக அமிதாப் பச்சனும் அவரது மகளாக தீபிகாவும் நடித்துள்ளனர். நகைச்சுவையை பின்னணியாகக் கொண்டு படம் எடுக்கப் பட்டுள்ளது. பிக்கு என்ற கேரக்டரில் நடிகை தீபிகா ஆபீசில் வேலை செய்து கொண்டே குடும்பத்தைக் கவனிக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.

எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 100 கோடி படங்களின் நடிகை தீபிகாவுடன் நடிகர் இர்பான் கானும் இணைந்து நடித்து உள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

அமிதாப் பச்சன்:

அமிதாப் பச்சன்:

இந்தி பட உலகின் துருவ நட்சத்திரமாக விளங்கும் அமிதாப் இளைய தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடிப்பதில் ஆர்வமுள்ளவர் (தனுஷுடன் ஷமிதாப், அபிஷேக்குடன் பா) இரண்டாவது முறையாக தீபிகாவுக்கு அப்பாவாக இதில் நடித்து உள்ளார்.

தீபிகா படுகோனே:

தீபிகா படுகோனே:

இந்தி திரை உலகில் அறிமுகமான புதிதில் ஆரஷன் படத்தில் அமிதாப் மகளாக நடித்து இருந்தார். மீண்டும் பல வருடங்கள் கழித்து முன்னணி நடிகையாக இருக்கும் மறுபடியும் அமிதாப்பின் மகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்னதான் எதிர் பார்ப்பு அதிகம் இருந்தாலும் படம் ஓடுகிறதா? என்பதை பார்க்கலாம்.

English summary
Pikku movie was released today. Deepika Padukone, Amitabh bachchan have acted in the movie. Amitabh played her father role in the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil