»   »  பிக்கு படமும் நட்சத்திரங்களின் ட்வீட்டும்

பிக்கு படமும் நட்சத்திரங்களின் ட்வீட்டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிக்கு படம் அனைத்து தரப்பினரையும் ஈர்த்து வரும் இந்த வேளையில் சினிமா நட்சத்திரங்கள் பலர் படத்தைப் பார்த்து ட்விட்டரில் படத்திற்கும் அதில் நடித்தோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

நடிகர் மாதவன், இயக்குனர் கரன் ஜோகர், ராஜ் கௌசல், நடிகை இலியானா ஆகியோர் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் நடிகர் இர்பானின் நடிப்பை பாராட்டி உள்ளனர்.

நடிகை தீபிகாவின் நடிப்பு குறித்து இவர்கள் எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

நடிகர் மாதவன் :

சீனியர் பச்சன் நீங்கள் மீண்டும் ஒரு வியக்கத் தக்க நடிப்பை அளித்து உள்ளீர்கள் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் படத்தில் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.

இயக்குனர் கரன் ஜோகர் :

குறைவான பாத்திரங்களை வைத்து மிக அற்புதமான ஒரு படத்தை கொடுத்திருக்கிர்கள் நான் இந்த ஆண்டில் பார்த்த மிகச் சிறந்த படம். இது என் இதயத்தை மட்டுமன்று எல்லா பாகங்களையும் தொட்டு சென்றது .

ராஜ் கவுஷல் இயக்குனர் :

இந்த ஆண்டின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நான் கண்டிப்பாக உங்களுக்கு வாக்களிப்பேன் .

நடிகை இலியானா :

இர்பான் எப்பொழுதுமே சூப்பர் என்று கூறிய அவர் தொடர்ந்து இந்த படத்தின் அப்பா மகள் உறவு பற்றியும் கூறி நெகிழ்ந்து உள்ளார்.

English summary
Bollywood celebrities have hailed the movie Piku and its stars in Twitter
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos