»   »  என்னாச்சு விஷால்... அவ்ளோதானா திருட்டு டிவிடி போராட்டம்?

என்னாச்சு விஷால்... அவ்ளோதானா திருட்டு டிவிடி போராட்டம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

குடிகாரன் பேச்சு...விடிஞ்சா போச்சுனு சொல்வாங்க... அந்த வரிசையில சினிமாகாரங்க பேச்சையும் சேர்த்துக்கலாம். மற்றவர்கள் விஷயத்தில் ஓகே... ஆனால் தங்கள் சொந்த பிரச்னைகளையே பேசுகிறார்கள். பின்னர் மறந்துவிடுவார்கள். அதில் முக்கியமானது திருட்டு டிவிடி விவகாரம்.

படம் ரிலீஸான சில நாட்களில், படத்தின் ஹீரோ, இயக்குனர், தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கமிஷனர் அலுவலகத்தில் திருட்டு டிவிடிக்கு எதிராக புகார் கொடுப்பார்கள். இதனை சம்பிரதாயமாகவே வைத்துள்ளார்கள். அடுத்த சில நாட்களில் படத்தோடு சேர்ந்தே திருட்டு டிவிடி புகாரும் காணாமல்
போய்விடும்.

Piracy: A question to Vishal

ஆக, இவர்களுக்கு நிரந்தர தீர்வு தேவையில்லை. திருட்டு டிவிடிக்கு எதிராக மருது விழாவில் அவ்வளவு ஆவேசமாக குரல் கொடுத்த விஷால் கூட அதன் பின்னர் இரண்டு இடங்களில் மனிதன் திருட்டு டிவிடியை பிடித்ததோடு சரி... பின்னர் ஆளைக் காணவில்லை.

ஒரு விஷயத்தைக் கையிலெடுத்துவிட்டால், அதற்கு தீர்வு காணும் வரை ஓயக் கூடாது. நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கைப்பற்ற தீயா வேலப் பாத்த மாதிரி, திருட்டு வீடியோவுக்கு எதிராகவும் வேலப் பார்க்க வேண்டாமா?

English summary
It seems actor Vishal is calm down in video piracy issue.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil