For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நானும் மதுரைக்காரன்தான்.... சொல்கிறார் "பிரான்மலை" ஆதவா பாண்டியன்

  By Mayura Akilan
  |

  தமிழ்சினிமாவில் மதுரை மண்ணின் மைந்தர்களுக்கு தனி இடம் உண்டு. தென்மாவட்டத்தின் பெருமை பேசும் பாரதிராஜா, பாலா, அமீர், சசிகுமார் என இயக்குநர்கள் இருக்க 30 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையில் இருந்து சென்னை வந்து தமிழ் சினிமா உலகில் ஜெயித்து இன்றைக்கு அரசியல் தலைவராகவும் உருவெடுத்துள்ள விஜயகாந்த்திற்கு மதுரை மண்ணின் மைந்தர்கள் பலரும் ரசிகர்கள்தான்.

  பிரான்மலை திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ஆதவா பாண்டியனும் மதுரை மண்ணின் மைந்தர்தான். கணினித்துறையில் பொறியியல் பட்டதாரியான ஆதவா, சினிமாத்துறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். கணினித்துறையில் இருந்து கலைத்துறைக்கு வந்தது எப்படி? என்பது பற்றி முதன்முறையாக நம்மிடையே மனம் திறந்துள்ளார் ஆதவா பாண்டியன். நமது தமிழ் ஒன்இந்தியா இணையதளத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியை படியுங்களேன்.

  அண்ணனின் ஆசி

  அண்ணனின் ஆசி

  சொந்த ஊர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி. படித்தது பி.இ., ஐ.டி பிரபல நிறுவனங்களில் பணிபுரிந்து விட்டு ஆஸ்திரேலியா சென்று விட்டேன். அங்கேயிருந்த போதுதான், அண்ணன் ஆர்.பி. பாண்டியனும், அவரது நண்பரும் இணைந்து தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க அழைத்தார்கள். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தினால் பல லட்சம் ரூபாய் சம்பளத்தையும் விட்டுவிட்டு நடிக்க வந்து விட்டேன்.

  உண்மை சம்பவம்

  உண்மை சம்பவம்

  நண்பனின் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம்தான் பிரான்மலை படத்தின் கதை. காதல், நட்பு, குடும்ப சென்டிமெண்ட் கலந்த கதை. கதைத்களம் மதுரை என்பதால் மதுரையைச் சுற்றிய பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. எந்த சீனுக்கும் டூப் போடவில்லை. சண்டை காட்சிகளில் நானாகவே நடித்து நிறைய அடி வாங்கியிருக்கிறேன்.

  காதல் காட்சிகள்

  காதல் காட்சிகள்

  நாயகி நேகா ஏற்கனவே சில படங்களில் நடித்திருக்கிறார். காதல் 2014, படத்தின் நாயகி நேகாதான் பிரான்மலையில் எனக்கு ஜோடியாக நடிக்கிறார். நம் ஊர் பெண் போல இருக்கும் நேகா பார்ப்பதற்கு சிநேகா சாயலில் இருக்கிறார். சண்டை காட்சிகள், நடனக்காட்சிகளில் நடிக்கும் போது எதுவும் சிரமமாக தெரியவில்லை. ஆனால் காதல் காட்சிகளில் உதறல் எடுத்தது உண்மைதான். போக போக பழகிவிட்டது.

  காமெடிக்கு கஞ்சா கருப்பு

  காமெடிக்கு கஞ்சா கருப்பு

  பிரான்மலை படத்தில் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, கஞ்சா கருப்பு, முத்துகாளை, ப்ளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கின்றனர். காமெடி காட்சிகள் படத்தோடு இணைந்து வந்திருக்கும். படம் பார்க்கும் போது உங்களுக்கே அது தெரியவரும்.

  பிரபலங்களின் ஆசியுடன்

  பிரபலங்களின் ஆசியுடன்

  படத்தின் இயக்குநர் அகரம் காமுரா இவரும் அறிமுகம்தான். பிரபல படத்தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் பிரான்மலையில் படத்தொகுப்பாளராக பணிபுரிந்திருக்கிறார். சாந்தமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அறிமுக இசையமைப்பாளர் பாரதி விஸ்கார் அருமையான மெட்டுக்களை அமைத்திருக்கிறார்.

  கவிப்பேரரசு வைரமுத்து

  கவிப்பேரரசு வைரமுத்து

  பிரான்மலை படத்தின் கதையை கேட்ட உடன் அருமையான பாடல்களை எழுதிக்கொடுத்திருக்கிறார் கவிப்பேரரசு வைரமுத்து. இதற்காக அவர் வாங்கிய சம்பளம் குறைவுதான். அம்மாவின் பாசத்தை உணர்த்தும் பாடலை எழுதியிருக்கிறார் அதை கேட்பவர்கள் அனைவருமே அம்மாவை இன்னும் கொஞ்சம் கூடுதலாக நேசிக்கத் தொடங்குவார்கள்.

  வீரம் விளைஞ்ச மண்

  வீரம் விளைஞ்ச மண்

  அன்பைக்கூட அதட்டலாக சொல்லும் மண்ணிற்குச் சொந்தக்காரர்கள் மதுரைக்காரர்கள். இதில் வெட்டு குத்து என்பது அதிகம் இருக்காது குடும்ப சென்டிமெண்ட் நிறைந்த இந்தப்படத்தில் ஒரு பாடலில்
  இன வீரமும் குல மானமும் இழிவாகுமா?...
  ரத்தக்கறைதான் கண்ணீரில் போகுமா?
  ஜென்மப்பகைதான் இப்போது தீருமா? என்ற வரிகள் அனைவருக்கும் பிடித்துப்போகும்.

  மதுரை கதைக்களம்

  மதுரை கதைக்களம்

  கதைக்களம் மதுரை என்பதால் மதுரையைச் சுற்றியுள்ள திருமங்கலம், திருநகர், உசிலம்பட்டி ஆகிய இடங்களிலும், திண்டுக்கல், கொடைக்கானல் கோவை ஆகிய ஊர்களிலும் படமாக்கியிருக்கிறோம்.

  ஜாதி ரீதியான படமா?

  ஜாதி ரீதியான படமா?

  பிரான்மலை என்ற தலைப்பை பார்த்த உடனே இது குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த படமா? என்ற கேள்வி எழும். இது குடும்ப பாசத்தை உணர்த்தும் பாசம் மிக்க படம் அனைவருக்கும் பிடிக்கும் வகையில் எடுத்திருக்கிறோம். சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது என்கிறார்.

  உங்க ஆசி வேணும்

  உங்க ஆசி வேணும்

  புதுமுகமான தன்னை தமிழ் சினிமா ரசிகர்கள் என்னை ஏற்றுக்கொண்டு ஆதரவு தரவேண்டும் என்கிறார் ஆதவா பாண்டியன். வாங்க மதுரைக்காரரே... தமிழ் சினிமா ரசிகர்கள் உங்களை ஏற்றுக்கொள்வார்கள் என்று வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்!

  English summary
  Madurai based hero Aadhava Pandian debut in Piran Malai Movie.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X