பிசாசு- 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்டேட் வெளியானது!
சென்னை : தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் மிஸ்கின் இப்பொழுது பிசாசு 2 படத்தை இயக்கி வருகிறார்.
பிசாசு முதல் பாகம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்திற்கு அதைவிடக் கூடுதலாக எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.
இதில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வர சிறப்பு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படும் நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தேதி பற்றிய முக்கிய அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

மென்மையான பேயை
தமிழ் சினிமாவில் எத்தனையோ பேய் படங்கள் வந்திருந்தாலும் மிஸ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு தனி இடத்தை பிடித்துள்ளது. அதுவரை பேய் படங்கள் என்றால் கொடூரமாகவும் திகிலாகவும் மிரட்டுவதாகவும் இருக்கும் என்ற அமைப்பை உடைத்து பிசாசு திரைப்படத்தின் மூலம் பேய்களுக்கும் அன்பு, பாசம், காதல், உணர்வு என அனைத்தும் இருக்கும் என மென்மையான பேயைக் காட்டி இருப்பார்கள். இவ்வாறு வித்தியாசமாக வெளியான பிசாசு ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நிலையில் ஆறு ஆண்டுகள் கழித்து பிசாசு 2ஆம் பாகத்தை மிஸ்கின் இயக்கி வருகிறார்.

ஆண்ட்ரியா
பிசாசு இரண்டில் ஆண்ட்ரியா முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வர சில உண்மையான சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் தயாராகி வருகிறது. சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வந்தது கொரோனா பரவலால் படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டு இருந்தது. இப்பொழுது கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளதால் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.

விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில்
இதில் ஆண்ட்ரியா சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டு வந்தது மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்ற செய்தியும் வெளிவந்துள்ளது. ஹீரோவாக மட்டுமல்லாமல் சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் விஜய் சேதுபதி தோன்ற பிசாசு இரண்டிலும் நடிக்க இருப்பது பல ரசிகர்களையும் மிக எளிதில் சென்றடையும். மேலும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசை அமைக்கிறார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார்த்திக் ராஜா இந்த படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்
நடிகை தமன்னாவின் அசத்தல் நடிப்பில் ஓடிடியில் வெளியான நவம்பர் ஸ்டோரியில் முக்கிய வேடத்தில் நடித்திருந்த நடிகை நமீதா கிருஷ்ணமூர்த்தியும் இப்படத்தில் இணைந்துள்ளார். பிசாசு 2 படத்தின் பெரும்பாலான காட்சிகள் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பிசாசு 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் தற்பொழுது வெளியாகி உள்ளது. அதாவது பிசாசு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 3ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ம் தேதி மாலை 6
பிசாசு முதல் பாகத்திலேயே பேயை மிக வித்தியாசமாக பேய்க்கும் உணர்வுகள் உண்டு என அனைவருக்கும் பிடிக்கக்கூடிய வகையில் இயக்குனர் மிஸ்கின் காட்டியிருந்தார். அதனால் பிசாசு இரண்டுக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாவது பாகமும் மிஸ்கின் ஸ்டைலில் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











