»   »  பிச்சைக்காரனின் கோட்டா பாட்டுக்கு மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி

பிச்சைக்காரனின் கோட்டா பாட்டுக்கு மன்னிப்பு கேட்ட விஜய் ஆண்டனி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள கோட்டா சீட்டு பாட்டுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். சர்ச்சைக்குரிய வரியை நீக்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் விஜய் ஆண்டனி.

'பீப்' பாடல் சர்ச்சை அடங்குவதற்குள் அடுத்து மற்றொரு பாடலும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. சமீபத்தில் வெளியான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்த 'பிச்சைக்காரன்' திரைப்படத்தின் ப்ரமோ பாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பாழாப்போன உலகத்திலே காசு பணம் பெருசு எனத் தொடங்கும் அந்த பாடலில், 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, இந்த வரிகள் இடஒதுக்கீடு முறையில் சீட் வாங்கி படித்த டாக்டர்களை இழிவுபடுத்துவதாக உள்ளதாக, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் உட்பட பல்வேறு டாக்டர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்தன.


சர்ச்சைக்குரிய இந்த பாடல் வரிகளை நீக்கவும், விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டன. இல்லாவிட்டால், பல்வேறு போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தனர்.


இது குறித்து கருத்து கூறியுள்ள இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, சமூக அவலங்களுக்கு எதிரான குற்றங்களை மையப்படுத்தி, சமூக விழிப்புணர்வு பாடலாக, இந்த பாடலை நாங்கள் வடிவமைத்தோம். பல்வேறு டாக்டர்கள் சங்கத்தினர் கூறும் 'கோட்டாவில் சீட்டு வாங்கிய டாக்டர்' என்ற வார்த்தை தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்று கூறினார்


சர்ச்சை வரிகள் மாற்றம்

சர்ச்சை வரிகள் மாற்றம்

இந்த பாடலுக்கு அந்த வரிகள் முக்கியமான வார்த்தையாக இருக்கிறது. அதனால்தான் நான் இந்த வரிகளை வைத்தேன் என என்னிடம் சொன்னார். இந்த பாடலை எழுதிய லோகன் மீது எந்த தவறும் இல்லை. அவர் சொல்ல வந்த நல்ல கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டது. அதற்காக அவரும் என்னிடமும் வருத்தம் தெரிவித்து, சர்ச்சையான வரியினை மாற்றிவிட்டார்.


நேர்மையான டாக்டர்கள்

நேர்மையான டாக்டர்கள்

மேலும், இந்த பாடலிலேயே 'பாடையில போனாக்கூட லஞ்சம் கேட்கிறான்'; 'வேலைவெட்டி இல்லாம சாமியார் ஆகறான்' என்ற வரிகளும் இடம்பெற்றிருக்கு. இதுவும் இந்த வரிகளுடன் தொடர்புடைய நபர்களை மையப்படுத்திதான் சொல்லியிருக்கிறோமே தவிர, நேர்மையான யாரையும் மையப்படுத்தி இந்த பாடலை அமைக்கவில்லை. நாங்கள் பணம் கொடுத்து சீட் வாங்கி, படித்த சில போலி டாக்டர்களைத்தான் குறிப்பிட்டிருந்தோம். அனைத்து டாக்டர்களையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.


வருத்தம் தெரிவிக்கிறேன்

வருத்தம் தெரிவிக்கிறேன்

நாங்கள் நல்ல எண்ணத்தில் தான் இந்த பாடலையும், குறிப்பிட்ட அந்த பாடல் வரிகளையும் அமைத்தோம். ஆனால், குறிப்பிட்ட அந்த இரண்டு வரிகளும் இடஒதுக்கீட்டில் படித்த நேர்மையான டாக்டர்கள் வருத்தப்படும் படியாகவும், அவர்களின் மனம் புண்படும் படியாகவும் இருக்குமானால், அதற்கு எங்கள் 'பிச்சைக்காரன்' படக்குழுவினரின் சார்பிலும், என் சார்பிலும் வருத்தம் தெரிவிக்கிறேன்.


காசு கொடுத்து சீட்டு

காசு கொடுத்து சீட்டு

'கோட்டாவுல சீட்டு வாங்கி' என்ற வரியை மாற்றியமைத்து, 'காசுகொடுத்து சீட்டு வாங்கி டாக்டர் ஆகுறான்'; 'தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான்' என்ற வரிகள் இருப்பெரும் வகையில் அந்த பாடலை சிரமப்பட்டு மீண்டும் அந்த பாடலை புதிதாக ரெக்கார்டிங் செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் விஜய் ஆண்டனி,


இது ஒரு பாடம்

இது ஒரு பாடம்

இன்று மாலை எங்கள் 'பிச்சைக்காரன்' படக்குழுவினர் சார்பில் வருத்தம் தெரிவித்து, ஒரு அறிக்கையை நான் வெளியிட இருக்கிறேன். இனி வருங்காலங்களில் இது போன்ற தவறுகள் இடம்பெறா வண்ணம் இருக்க, இந்த சம்பவத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொள்கிறோம் என்றும் கூறியுள்ளார்.


டாக்டர்கள் வரவேற்பு

டாக்டர்கள் வரவேற்பு

'கோட்டாவுல' என்ற வார்த்தையை 'காசுகொடுத்து' என மாற்றியதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். 'காசுகொடுத்து' சீட் வாங்கி டாக்டர்கள் ஆன போலி டாக்டர்களை குறிப்பிட்டிருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் என்று டாக்டர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். விஜய் ஆண்டனியிடம் இருந்து வருத்தம் தெரிவிப்பது தொடர்பான அறிக்கை வந்தவுடன், எங்களுடைய போராட்டங்களை ரத்து செய்வது பற்றிய அறிவிப்பையும் நாங்கள் தெரிவிப்போம். இருப்பினும், எங்கள் சங்கத்தில் கலந்து ஆலோசித்து அந்த இரண்டு வரிகளுமே முழுமையாக நீக்க வேண்டுமா? என்பது குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


இனிமே பாட்டு எழுதுறவங்க பதமாத்தான் எழுதணும் போலயே...English summary
Vijay Antony appology to Doctors for his ‘Glamour Song’ in his upcoming movie ‘Pichaikaaran’, alleging that it portrayed doctors in bad light.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil