»   »  ஹாலிவுட் போகும் பீட்ஸா

ஹாலிவுட் போகும் பீட்ஸா

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த பீட்ஸா திரைப்படம் ஹாலிவுட்டில் டப்பிங் செய்யப்படுகிறதாம். இதற்குக் காரணம் இத்தாலியில் நடைபெற்ற திரைப்பட விழாவில் பீட்ஸா பெற்ற விருதுதான் என்கின்றனர்.

இந்தியாவில் தயாராகும் படங்களுக்கு இத்தாலியில் கொடுக்கப்படும் விருதுதான் ரிவர் டூ ரிவர். இந்த விருதை பெற்றிருக்கிறது விஜய் சேதுபதி நடித்த வெற்றிப்படமான பீட்சா. புளோரன்ஸ் இந்தியா பிலிம் பெஸ்டிவெல் 2013 என்ற திரைப்பட விழாவில் வழங்கப்படும் இந்த விருது அதிக பெருமை வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Pizza to be dubbed in English!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள பீட்ஸா படம் இத்தாலியில் விருது பெற்றதால்பெருமை மட்டுமல்ல, பணமும் கிடைத்துள்ளது.

அந்த விழாவுக்கு வந்திருந்த ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் இந்த படத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட ஆசைப்பட்டிருக்கிறாராம்.

இப்படி ஆங்கிலத்தில் வெளியாகும் படங்களுக்கு வெறும் தயாரிப்பாளருக்கு மட்டும் ஒரு தொகையை கொடுத்துவிட்டு படமாக்குவது வழக்கமில்லையாம் அவர்களுக்கு.

படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், இயக்குனர், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லாருக்குமே பெரும் தொகையை கொடுப்பார்களாம். இது டாலரில் தரப்படுவதால், இந்திய பண மதிப்புக்கு எக்கச்சக்கமாக கிடைக்கும் என்கிறார்கள்.

திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத் தயாரிப்பாளர் சி.வி.குமார் இதனால் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார். பீட்ஸா திரைப்படம் ஏற்கனவே பாலிவுட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்போது ஹாலிவுட்டிற்கும் செல்வதால் தயாரிப்பாளருக்கு இரட்டிப்பு சந்தோசமாம்.

English summary
The latest buzz in K-town is that a Hollywood filmmaker has sought the English dubbing rights of Pizza after seeing the film at an international film festival. If reports are to be believed, Pizza directed by debutante Karthik Subbaraj will be dubbed and released in Hollywood.
Please Wait while comments are loading...