»   »  ஆமீர்கானின் பிகே எப்படி? பிரபலங்களின் நறுக் விமர்சனம்!

ஆமீர்கானின் பிகே எப்படி? பிரபலங்களின் நறுக் விமர்சனம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆமீர்கான் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள பிகே படம் குறித்து திரையுலக மற்றும் இதர விஐபிக்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

ஆமீர்கான் - அனுஷ்கா சர்மா நடித்துள்ள பிகே படம் இன்று உலகெங்கும் அதிக அளவு அரங்குகளில் வெளியானது.

நேற்று முன்தினம் விஐபிக்களுக்காக இந்தப் படத்தின் சிறப்புக் காட்சி காட்டப்பட்டது. அதில் பங்கேற்ற பிரபலங்கள் படம் பார்த்துவிட்டு தெரிவித்துள்ள சில கருத்துகள்:

சச்சின் டெண்டுல்கர்:

சச்சின் டெண்டுல்கர்:

பிகே படம் அருமையாக உள்ளது. அந்தப் படம் குறித்த வேறு விஷயங்களை வெளியில் சொல்ல மாட்டேன் என்று ஆமீருக்கு நான் வாக்களித்திருக்கிறேன். ஆமீர் கான் படங்களிலேயே பெஸ்ட் இந்தப் படம். சிறப்பாக நடித்துள்ளார்.

கரண் ஜோகர்

கரண் ஜோகர்

பிகே மிகச் சிறப்பான படம். ராஜ் குமார் ஹிரானி நாட்டின் சிறந்த இயக்குநர் என தன்னை நிரூபித்துவிட்டார். ஆமீர்கானின் பெஸ்ட் படம் இது.

சோனம் கபூர்

சோனம் கபூர்

என்ன ஒரு பிரமாதமான படம் இது. ஒவ்வொருவரும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும். ஆமீர் கானைத் தவிர வேறு யாராலும் இப்படி ஒரு படம் தர முடியாது.

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

பிகே பார்த்தேன். அவுட்ஸ்டான்டிங். ஆமீர், அனுஷ்கா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர்.

ரசூல் பூக்குட்டி

ரசூல் பூக்குட்டி

பிகே படம் நாட்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக வந்துள்ளது. மிகப் பெரிய படம். ஆமீர்கான் நம் நாட்டின் பெருமை.

English summary
Rajkumar Hirani's directorial film "PK" has got excellent reviews from Bollywood celebrities. A special screening of the movie, which features Aamir Khan, Anushka Shetty, Sanjay Dutt and Sushant Singh Rajput, was organised on Tuesday by the makers of the film.
Please Wait while comments are loading...