Don't Miss!
- News
ஓபிஎஸ், ஈபிஎஸ் 2 பேருமே வேட்பாளரை அறிவிக்க மாட்டாங்க.. ‘ட்விஸ்ட்’ இருக்கு.. ஜான் பாண்டியன் சொல்றாரே!
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Sports
45 பந்துகளாக பவுண்டரிகள் இல்லை.. டெஸ்ட் மேட்ச் போல் டி20 ஆடிய இந்தியா..கடைசி ஓவரில் திரில் வெற்றி
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
அஸ்வின் குமாரின் புதிய படம் முதல் ஹே சினாமிகா ரிலீஸ் வரை.. பிகே டாப் 5 பீட்ஸ்!
சென்னை: பிகே டாப் 5 பீட்ஸ் வீடியோவில் புதிதாக சில சுவாரஸ்ய சினிமா அப்டேட்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video

குக் வித் கோமாளி மூலம் பிரபலமான அஸ்வின் குமார் என்ன சொல்ல போகிறாய் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு அந்த படம் போகவில்லை அதற்கு காரணம் ஆடியோ லாஞ்சில் அவர் பேசியது தான் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் அவர் கமிட் ஆகி உள்ளார் எனக் கூறப்படுகிறது. தொடர்ந்து படங்கள் சொதப்பி வரும் நிலையில், பிரபு சாலமனும் ஒரு கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில், அஸ்வின் குமாருக்கு அடுத்த படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும் எனக் கூறப்படுகிறது.
பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களின் சம்பளம் இவ்வளவா...வெளியான சூப்பர் தகவல்
இரண்டாவது பீட்டாக டோவினோ தாமஸ் சினிமா துறையில் அடியெடுத்து 10 ஆண்டுகளை கொண்டாடிய விஷயத்தை பிகே கூறியுள்ளார். சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியான அவரது மின்னல் முரளி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் இந்திய சினிமாவையே வியக்க வைத்த இயக்குநர் பா. ரஞ்சித் ஒடிடி தளத்தில் புதிய வெப் தொடரை இயக்க ரூ. 15 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது.
சியான் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க உள்ள பா. ரஞ்சித் அதற்கு முன்னதாக இந்த வெப் தொடரை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொன்னியின் செல்வன் எடிட்டிங் ரூமில் எடிட்டருக்கும் இயக்குநர் மணிரத்னமுக்கும் இடையே நடந்த சுவாரஸ்ய தகவல் ஒன்றையும் ஷேர் செய்துள்ளார் பிகே.
இறுதியாக லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் என்பது போல நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் இயக்குநர் அவதாரமெடுத்து இயக்கி உள்ள ஹே சினாமிகா படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட்டையும் கொடுத்துள்ளார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், குரூப் என தொடர்ந்து ஹிட் அடித்து வரும் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி உள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் நாயகிகளாக நடித்துள்ளனர்.