»   »  பிரசாந்த் படக் கதையை சுடப் பார்க்கும் விக்னேஷ் சிவன்?

பிரசாந்த் படக் கதையை சுடப் பார்க்கும் விக்னேஷ் சிவன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒருவழியாக சூர்யாவின் அடுத்த படம் விக்னேஷ் சிவனுடன்தான் என்பது உறுதியாகிவிட்ட்து.

நானும் ரவுடிதான் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவன் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் இயக்குனர் ஆகிவிட்டார். நயன்தாராவுக்கு காதலராகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் விக்னேஷ் சிவன் அடுத்து சிவகார்த்திகேயனுக்கு கதை சொன்னார். ஏ.எம்.ரத்னம் - விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் என சொன்னார்கள். ஆனால் அந்த காம்பினேஷன் உடைந்த்து.

Plagiarism charges on Vignesh Sivan

விக்னேஷ் சிவனை கமிட் செய்து நயனை தன் அடுத்த படத்து கதாநாயகியாக்கிய சிவகார்த்திகேயன் விக்னேஷ் சிவனை உட்கார வைத்தார். அடுத்து மோகன் ராஜா, அதற்கடுத்து பொன்ராம், அதற்கும் அடுத்து ரவிகுமார் அப்புறம் தான் விக்னேஷ் சிவன் என்று சிவகார்த்திகேயன் ரயில்வே வெய்ட்டிங் லிஸ்ட் கணக்காக ஒரு லிஸ்டை சொல்ல இது இப்போதைக்கு வேலைக்கு ஆகாது என்பதை உணர்ந்த விக்னேஷ் பிற ஹீரோக்களை பார்க்க ஆரம்பித்தார்.

அப்படி சூர்யாவை பார்த்து கதை சொன்னார். அவர் இழுத்துக்கொண்டே போக ஒருகட்டத்தில் தானே ஹீரோ அவதாரம் எடுக்கலாமா என்ற விபரீத யோசனைக்கும் சென்றார். நல்ல வேளையாக சூர்யா ஓகே சொல்ல காம்பினேஷன் உறுதியானது.

இந்த படத்தின் கதையை கேட்ட சூர்யா வைத்த ஒரே கண்டிஷன் நயன்தாரா படத்தில் இருக்க கூடாது என்பதுதானாம். இதில் விக்னேஷ் சிவனுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

சூர்யா விக்னேஷ் சிவன் இணையும் அந்த கதை போலி சிபிஐ ஆபிசர் பற்றியது என்கிறார்கள். அதாவது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஸ்பெஷல் 26 படத்தின் கதை என்கிறார்கள்.

இது ஸ்பெஷல் 26 படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கு தியாகராஜன், பிரஷாந்த் இருவரையும் டென்ஷனாக்கியுள்ளது. ஸ்பெஷல் 26-ஐ பிரசாந்துக்கு ஸ்பெஷலான படமாக அமைத்துக் கொடுக்க இயக்குநரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் முயற்சித்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி சைடு கேப்பில் விக்னேஷ் சிவன் அதே கதையை உருவப் பார்ப்பது நியாயம்தானா?

இந்தக் கேள்வியோடு ஒரு பஞ்சாயத்துக்கு வரலாம்!

English summary
Sources say that director Vignesh Sivan's story line for his Surya starrer is based on Special 26.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil