»   »  கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலா... 17, 695 பாடல்களை தனியாக பாடி சாதனை!

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசீலா... 17, 695 பாடல்களை தனியாக பாடி சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரபல பின்னணிப்பாடகி பி.சுசீலா கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்திருக்கிறார்.

9 மொழிகளில் சுமார் 40,000க்கும் மேற்பட்ட பாடல்களை சுசீலா இதுவரை பாடியிருக்கிறார். இதில் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 64 வருடங்களுக்கும் மேலாக திரையுலகில் பாடிவரும் சுசீலா அவர்களின் திரையுலக வரலாறு குறித்து இங்கே காணலாம்.

சுசீலா பிறப்பு

சுசீலா பிறப்பு

1935 ம் ஆண்டு ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 5 சகோதரிகள், 3 சகோதரர்கள் கொண்ட பெரிய குடும்பத்தில் சுசீலா பிறந்தார். சுசீலாவின் தந்தை ஒரு வக்கீல் என்பதால் சுசீலாவை அவர் நன்றாக படிக்க வைத்தார். ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக சுசீலா இசை பயின்றவர். மேலும் ஆந்திர பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் டிப்ளமோ படிப்பையும் சுசீலா முடித்திருக்கிறார்.

பாப்பா பாட்டு

பாப்பா பாட்டு

1950 ம் ஆண்டு சென்னை வானொலியில் பாப்பா பாட்டு என்னும் நிகழ்ச்சிக்காக சுசீலா பாட ஆரம்பித்தார். இதுதான் அவரது திரையுலக வாழ்க்கைக்கான ஆரம்பமாக அமைந்தது.1952 ம் ஆண்டு இசையமைப்பாளர் கே.எஸ்.பிரகாஷ் ராவ் தன்னுடைய பெற்ற தாய் படத்தில் சுசீலாவிற்கு பாட வாய்ப்பளித்தார்.

கணவனே கண் கண்ட தெய்வம்

கணவனே கண் கண்ட தெய்வம்

1955 ம் ஆண்டு கணவனே கண் கண்ட தெய்வம் படத்தில் சுசீலா பாடிய எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும் மற்றும் உன்னைக் கண் தேடுதே போன்ற பாடல்கள் சுசீலாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.

விருதுகள் பட்டியல்

விருதுகள் பட்டியல்

1969, 1971, 1976, 1982, 1983 என ஐந்து முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ‘தேசிய விருது' . 2008-ல் மத்திய அரசின் பத்ம விபூஷன் விருது. 2001 -ம் ஆண்டு ஆந்திர மாநில அரசின் 'ரகுபதி பெங்கையா விருது'. 1969, 1981, 1989 என மூன்று முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருது 1971 மற்றும் 1975 என இரண்டு முறை கேரளா மாநில அரசின் விருது. 1977, 1978, 1982, 1984, 1987, 1989 என ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகிக்கான ஆந்திர மாநில அரசின் விருது என மொத்தம் 18 விருதுகளை சுசீலா இதுவரை வென்றிருக்கிறார். பின்னணிப் பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்றவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

9 மொழிகளில்

9 மொழிகளில்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி, இந்தி, ஒரியா, சமஸ்கிருதம், சிங்களம் என 9 மொழிகளில் சுமார் 40,000 க்கும் அதிகமான பாடல்களை சுசீலா இதுவரை பாடியிருக்கிறார்.

கவிக்குயில்

கவிக்குயில்

கவிக்குயில், தென்னகத்து லதா மங்கேஷ்கர் போன்ற பெயர்கள் சுசீலாவிற்கு உண்டு. 81 வயதான சுசீலா ஒவ்வொரு வருடமும் தன்னுடைய பிறந்தநாளை நவம்பர் 13 ம் தேதி கொண்டாடுவார். அன்றைய தினம் இசை நிகழ்ச்சி நடத்தி அதில் வரும் வருமானத்தை, வறுமையில் வாடும் இசைக்கலைஞர்களுக்கு வழங்கி வருகிறார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

அதிக பாடல்களை பாடியதற்காக பின்னணிப் பாடகி சுசீலாவின் பெயர் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் 17,695 பாடல்களை தனியாக பாடியதற்காக சுசீலாவின் பெயர் தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இசைக் குயிலுக்கு வாழ்த்துகள்!

English summary
Playback Singer P.Susheela made Guinness Record. She is Singing Highest Number of Solo Songs in the World.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil