»   »  நிவின் பாலி பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்!

நிவின் பாலி பிறந்தநாளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த இயக்குநர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொச்சின் : 'ப்ரேமம்' படத்தின் மூலம் மலையாள சினிமாவைத் தாண்டி தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் நிவின் பாலி. அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடிக்கும் பிற மலையாளப் படங்களையும் தமிழ் ரசிகர்கள் விரும்பிப் பார்க்கத் தொடங்கி விட்டனர்.

'நேரம்' படத்தில் நடித்திருந்த நிவின் பாலி, தமிழ் ரசிகர்களுக்காக 'ரிச்சி' எனும் படத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ரௌடியாக நடித்திருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

Pleasant surprise for Nivin pauly

நேற்று 'ப்ரேமம்' நாயகன் நிவின் பாலிக்கு பிறந்தநாள். மலையாளத் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் பலரும் நிவின் பாலிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரபல இயக்குனர் ராஜீவ் ரவி ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரபல நடிகர், இயக்குனர் என்ற பல திறமைகளை கொண்ட நாராயண பிள்ளை அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நிவின் பாலி நடிப்பதைப் பார்க்கவிருப்பதாகக் கூறியிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்த நிவின் பாலி இந்தப் படத்தில் நடிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி என்று ட்விட்டரில் கூறியுள்ளார்.

English summary
Yesterday was the birthday of 'premam' hero Nivin pauly. Many of the leading stars from Malayalam film industry congratulated Nivin pauly. Rajeev Ravi, the famous director has released a Pleasant surprise announcement on nivin pauly's new film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil